அத்தனையும்
கலைக்கப்பட்டு
கனத்த மனத்தோடு
மட்டும்
நாடு கடத்தப்பட்டேனா?
கலைத்ததால் வந்தேனா?
விடை காண
முடியாத கேள்விகள்!!
தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலைக்குள்
சிக்கிய பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தாய்நாட்டை விட்டுத் தப்பி வந்தார்கள். இப்படித் தப்பிவந்தவர்களில் சில நூற்றுக்கணக்கானவர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்கள். அந்த நாட்டில் தஞ்சமடைந்தவர்கள்தான் இன்று அந்த நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சிக்கிய பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தாய்நாட்டை விட்டுத் தப்பி வந்தார்கள். இப்படித் தப்பிவந்தவர்களில் சில நூற்றுக்கணக்கானவர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்கள். அந்த நாட்டில் தஞ்சமடைந்தவர்கள்தான் இன்று அந்த நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சுமார் இரண்டு வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தாய்லாந்து (பாங்கொக் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின்) சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குழந்தைகளும், சிறுவர்களுமாக 21 பேரும், இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சிறைகளில் மிகவும் கொடூரமானதும், மிலேச்சத்தனமானதுமான சூழ்நிலைகளுக்குள் தமிழ் அகதிகள் முகம் கொடுக்கின்றார்கள். அவர்கள் சுதந்திரக் காற்றையும் சூரிய ஒளியையும் தரிசித்து பல மாதங்களாகின்றன. சிறிய கூண்டுகளில் பல நூற்றுக்கணக்கான வெவ்வேறு நாட்டுக் கைதிகளுடன் படுத்து உறங்குவதற்குக் கூட இடம் இன்றிப் பரிதவிக்கின்றார்கள். சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் முடக்கப்பட்டுள்ளது. உரிய ஊட்டச்சத்து இல்லாத உணவே கிடைக்கின்றது. அவர்களில் பலர் நோயுற்று இருக்கின்றார்கள். உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புற்றுள்ளார்கள். நோயாளிகளுக்கு எவ்வித பரிசோதனைகளும் இன்றி கம்பிகளுக்கு வெளியிலிருந்து மருந்துகள் எப்போதாவது ஒருநாள் வழங்கப்படுகின்றது. நோயாளிகள் மொழிபுரியாத தாய்லாந்து தாதியிடம் ஊமை சைகை மூலம் தெரிவிக்க வேண்டும்.
கொஞ்சம் சத்தமிட்டுக் கதைத்தால் நோயாளிகளின் கதி அதோகதிதான். நோயாளி கடும் சுகவீனமுற்று இருந்தாலும் மருந்து கிடைக்காது. குழந்தைகள் கடும் சுகவீனமுற்று கவனிப்பாரற்ற நிலையில், அனைத்து தமிழ் கைதிகளும் சத்தமிட்டு உணவு தட்டுக்களால் கதவுகளை தட்டி கலவரம் செய்து மருத்துவ உதவி பெற்று குழந்தைகளைக் காப்பாற்றிய சம்பவங்கள் அதிகம். கையில் பணம் வைத்திருந்தாலும் குழந்தைகள் விரும்பும் உணவை வாங்கிக் கொடுக்கமுடியாத பெற்றோர்கள், தமது பிள்ளைகளை ஒன்றுசேர்ந்து பார்க்க முடியாத அவலம். குழந்தைகள் மற்றும் பெண்பிள்ளைகள் தாயிடமும், ஆண் சிறுவர்கள் தந்தையர்களிடமும் பிரிக்கபட்டு அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். கணவன்மார்கள் தமது மனைவிமார்களை சந்தித்து சுமார் பத்து மாதங்களுக்கு மேலாகிவிட்டன. இதனால் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் நடைப்பிணங்களாகச் சிறையில் வாடும் அவலம் அங்கு நிலவுகின்றது.
எவ்வித குற்றங்களும் செய்யாமல், உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் அகதிகளாக தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான நிலையை தெரிவிக்கவோ, அறிவிக்கவோ அவர்களுக்கு வெளியுலக தொடர்புகள் எதுவுமே இல்லை. தாய்லாந்தில் உள்ள மனிதநேய அமைப்புக்களுக்கு இந்த விடயம் தெரிந்திருந்த போதிலும் அவர்கள் இந்தவிடயத்தில் ஏனோதானோவென்று இருக்கின்றார்கள்.
தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த அகதிகளுக்கு மென்மேலும் துன்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. சில கைதிகளை புலிகள் என்றும், குடும்பங்களோடு இருப்பவர்களை மாவீரர் குடும்பங்கள் என்றும் தமக்குச் சார்பான ஊடகங்களுக்கு அறிவிப்பதும், உள்ளே அடைக்கப்பட்டிருப்பவர்களை சென்று பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் தாய்லாந்து அரசுக்கு எழுத்து மூலம் கேட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தமிழ் அகதிகள் மீது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்படுகின்றது.
தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள பல நூற்றுக்கணக்கானோர் பாங்கொக் நகருக்கு அப்பால் உள்ள கிராமப்புற நகரங்களில் தொடர்மாடிகளிலும் மறைந்து வாழ்கிறார்கள். பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதற்கு அஞ்சுகிறார்கள். இலங்கை தூதரகத்தின் முகவர்கள் தம்மை காட்டிக்கொடுத்து சிறைகளுக்குள் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். தாய்லாந்தில் அகதிகள் என்ற போர்வையில் இராணுவத் துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தமிழ் அகதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.
தாய்லாந்தில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவராலயத்தில் சகல தமிழ் அகதிகளும் பதிவு செய்துள்ளனர். அந்த தூதுவராலயத்தால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் கூட பல வருடங்களாக எவ்வித முடிவும் இன்றி சிறைக்குள்ளும், வெளியிலும் இருக்கின்றார்கள். எனினும் அகதிகளுக்கு ஏற்படும் துர்பாக்கிய சம்பவங்களையும், அசெளகரிகங்களையும் கண்டும் காணாது இருப்பது கவலைக்குரியது. சிறைக்குள் உள்ள அகதிகளைப் பற்றி எவ்வித கவனமும் செலுத்தாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.
குழந்தைகள் படும் துன்பங்கள், துயரங்கள் பற்றி அவர்கள் கணக்கில் எடுப்பதாகவே தெரியவில்லை. குழந்தைகளையும், சிறுவர்களையும் சிறைக்குள் அடைப்பது சர்வதேச குற்றம் என்பது சிறுவர்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் யுனிசெப் (UNICEF)தனது அறிக்கைகளில் அடிக்கடி வெளிப்படுத்தும் அதேசமயம் தமிழ் குழந்தைகளையும், சிறுவர்களையும் தாய்லாந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது பற்றி மெளனம் சாதிப்பது ஏன்? அந்தச் சிறுவர்களையும், குழந்தைகளையும் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளுக்குச் சென்று குறைந்தபட்சம் அவர்களின் நலன் தொடர்பாகக் கூட விசாரிக்கவில்லை என்பது கவலைக்கும், கண்டனத்துக்குமுரிய விடயம்.
குழந்தைகள் படும் துன்பங்கள், துயரங்கள் பற்றி அவர்கள் கணக்கில் எடுப்பதாகவே தெரியவில்லை. குழந்தைகளையும், சிறுவர்களையும் சிறைக்குள் அடைப்பது சர்வதேச குற்றம் என்பது சிறுவர்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் யுனிசெப் (UNICEF)தனது அறிக்கைகளில் அடிக்கடி வெளிப்படுத்தும் அதேசமயம் தமிழ் குழந்தைகளையும், சிறுவர்களையும் தாய்லாந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது பற்றி மெளனம் சாதிப்பது ஏன்? அந்தச் சிறுவர்களையும், குழந்தைகளையும் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளுக்குச் சென்று குறைந்தபட்சம் அவர்களின் நலன் தொடர்பாகக் கூட விசாரிக்கவில்லை என்பது கவலைக்கும், கண்டனத்துக்குமுரிய விடயம்.
எனவே வெளியுலகுக்கே தெரியாமல் தாய்லாந்தில் தமிழ் அகதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான நிலையிலிருந்து அவர்களை மீட்க அனைத்துச் சமூக அமைப்புக்களும் முன்வர வேண்டும். அவர்களின் விடுதலைக்காக நாம் எல்லோரும் குரல் கொடுக்கவேண்டும். அந்நிய நாடொன்றில் நிர்க்கதியாக அச்சத்துடன் வாழும் எம்மவர் துயர் துடைக்க தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் முன்வரவேண்டும்.
மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள
http://www.mobilize-humanity.org/
http://www.mobilize-humanity.org/
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழன்
வரதன்.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழன்
வரதன்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
என் குறிப்பாய் சில வரிகள்:
புலப்பெயர்வோடு சுமார் பத்தாண்டுக்கும் மேலாகத் தொலைத்து உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என் சினேகிதர்கள், உறவுகள் என் வலைப்பதிவில் என் பழைய நினைவுப் பகிர்வுகளை வாசித்து இனம் கண்டு தொடர்பை ஏற்படுத்துகின்றார்கள். அப்படியாக கடந்த மாதம் என்னை வலைபதிவு மூலம் அறிந்துகொண்ட எங்களூர் சகோதரன் ஒருவர் தாய்லாந்தில் தானும் இதே நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் வெளியேறிய இவரின் நண்பர் ஒருவர் தாய்லாந்துச் சிறையில் இருக்கும் போது சந்தித்த கண்ணுற்ற இன்னல்களை அவர் கைப்படவே எழுதவைத்து ஸ்கான் பண்ணி, செல்லிடப்பேசியில் முன்னர் எடுத்து வைத்த தடுப்புச் சிறைக்களத்தின் காட்சிகளையும் அனுப்பியிருந்தார்.
“பிரபா அண்ணை! நாங்கள் எல்லாரும் ஏதாவது செய்யவேணும்”
என்று இரஞ்சலாகவே கேட்டுக்கொண்டார்.
என்று இரஞ்சலாகவே கேட்டுக்கொண்டார்.
என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்கள்?
நாம் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு தமிழ் ஊடகங்கள் மூலம் இந்த அவலத்தை வெளிக்கொணர்ந்து அந்தந்த நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்களின் காதுகளில் எட்டவைத்து இந்த அப்பாவிகள் சிறையில் இருந்து வெளியேறிப் பாதுகாப்பாக ஒரு நாட்டில் தஞ்சம் ஏதாவது நாம் செய்யவேணும் இவர்களுக்கு…..
நாம் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு தமிழ் ஊடகங்கள் மூலம் இந்த அவலத்தை வெளிக்கொணர்ந்து அந்தந்த நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்களின் காதுகளில் எட்டவைத்து இந்த அப்பாவிகள் சிறையில் இருந்து வெளியேறிப் பாதுகாப்பாக ஒரு நாட்டில் தஞ்சம் ஏதாவது நாம் செய்யவேணும் இவர்களுக்கு…..
Geen opmerkingen:
Een reactie posten