வடக்கில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அமெரிக்கா, சிறிலங்கா அரசைக் கடுமையான தொனியில் கேட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் மரியா ஒட்டோரோ ஆகியோர் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவைச் சந்தித்த போதே இவ்வாறு கடும் தொனியில் வேண்டுகோள் விடுத்தனர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்போது கருத்துத் தெரிவித்த கோதபாய ராஜபக்ஷ, வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறச் செய்வது சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் சபையே. இது தவிர, சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமது நாடு செயற்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்த கருத்தினை அமெரிக்கத் தரப்பு நிராகரித்து விட்டது என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten