கொழும்பு பன்னிப்பிட்டி நெடுஞ்சாலையில் காரில் வந்துகொண்டிருந்த புத்த பிக்கு, எதிரே வந்த சூட் தியாகராஜ என்பவரின் வண்டியுடன் மோதியதில், பிக்கு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக சூட் தியாகராஜ கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 21ஆம் திகதி இரவு 11மணியளவில், கொட்டாவாவில் இருந்து மகரகாமாவிற்கு தனது ஜீப்பில் வந்துகொண்டிருந்த போது, எதிரே காரைச் செலுத்தி வந்த பிக்கு ஜீப்பின் மீது மோதியுள்ளார். அவர் அதிக மது போதையில் இருந்த காரணத்தினாலேயே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், புத்த பிக்குதன்னைப் போக அனுமதிக்கும்படியும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக தெரிவித்துள்ளதுடன் அவர் செலுத்தி வந்த காரிற்குள் மது போத்தல்களும், பன்றி இறைச்சிப் பொதிகள் இருந்ததாகவும் கூறினார்.
இதன்காரணமாக அவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கச் சென்ற போது, அவர் அதிக மது போதையில் இருந்ததால், அவருக்கென தனி சிகிச்சையறை ஒதுக்கப்பட விலை எனவும் பொது சிகிச்சைப் பிரிவிலேயே சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிக்குவின் கையில் எலும்பு முறிந்திருந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கொழும்பில் தெற்கு பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேற்படி மது போதையில் காரைச் செலுத்தியவர் நுகேகோடாவில் உள்ள ஜம்புகஸ்முல்லா மாவாத்தாகம கோதாமி விஹாரையின் தலைமை பிக்கு திரிபலகாமா பன்னஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் விருந்தொன்றிற்குச் சென்று, விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten