தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 februari 2012

ராஜபக்ஷ அரசியலுக்கு சமாதிகட்ட நினைத்த சந்திரிக்கா அம்மையார் !

19 February, 2012 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பு மகன் விமுக்திக்கு வந்து சேர வேண்டும் என்று விரும்பி இருக்கின்றார் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. குடும்ப ஆட்சியை நிலைநாட்டுகின்றமை தொடர்பாக இவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் ஒரு பனிப் போரே இடம்பெற்று வந்து இருக்கின்றது. இலங்கை அரசியலில் மிகுந்த பலம் வாய்ந்தது பண்டாரநாயக்க குடும்பம். ஆனால் பண்டாரநாயக்க குடும்பம் அரசியலில் ஈடுபட்ட காலம் தொடக்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் போட்டியாக இன்னொரு குடும்பம் வந்து இருக்கின்றது என்றால் அது ராஜபக்ஸ குடும்பம்தான்.

இதனால் ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் எப்போதும் கசப்பான உறவே காணப்பட்டு வந்திருக்கின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டமையை அடுத்து, என்றும் இல்லாதவாறு இக்கசப்பான உறவு மிக மோசம் அடைந்தது.
மஹிந்தரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியவர் சந்திரிகாதான். சந்திரிகாவின் மனதில் வேறு திட்டம். மஹிந்தர் இத்தேர்தலில் தோல்வி காண்கின்ற பட்சத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலவீனமான நிலையில் உள்ளது என அறிவித்து மகன் விமுக்தியை கட்சியின் தலைவராக நியமிக்க உத்தேசித்து இருந்தார்.

மகன் மூலம் குடும்ப ஆட்சி தொடர வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தார் சந்திரிக்கா. ஆனால் மஹிந்தரோ பிள்ளைகள் மூவர் மூலமாகவும் குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி இருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்தினிகளில் ஒருவரான நிருபமா ராஜபக்ஸ இவ்விபரங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றின் மூலம் விக்கிலீக்ஸில் இருந்து இவ்விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten