உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளைமுழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம்வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகதீர்மனாம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் கோரிக்கையைமுன்வைத்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் உரியமுறையில் அமுல்படுத்தப்பட்டால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில்பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கான பிரதான ஏதுவாக உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக் கொள்வதாக ஒன்றியம்தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வுகாணப்படவில்லை என ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சகல இன சமூகங்களுக்கும் இடையில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்ட விடயங்கள்தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தவில்லை எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும்குற்ற்ச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானத என ஐரோப்பியஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.