தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 februari 2012

அடேல்லீக்ஸ்: பிரபாகரன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக பங்களிப்பு வழங்கிய பெண் புலிகள்!



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதிர்பார்த்து இருந்தமையை காட்டிலும் புலிகளின் பெண் போராளிகள் விடுதலைப் போரில் அதிகமாகவே பங்களிப்புச் செய்து இருக்கின்றனர் என்று தெரிவித்து இருக்கின்றார் அடேல் பாலசிங்கம்.
Women Fighters of Liberation Tigers என்கிற தலைப்பில் இவரால் எழுதப்பட்ட நூலில் இவ்விபரம் காணப்படுகின்றது.
பெண்களை இயக்கத்தில் சேர்க்கின்றமைக்கும், உரிய இராணுவ பயிற்சிகளை வழங்குகின்றமைக்கும் வேண்டிய ஏற்பாடுகள், வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுத்த பெருமை புலிகள் இயக்கத்தில் தலைவர் வே. பிரபாகரனையே சேரும்.
பெண்கள் குறித்து காலம் காலமாக இருந்து வந்த சிந்தனை மற்றும் சமுதாயத்தில் பெண்களின் அந்தஸ்து மற்றும் வாழ்க்கை நிலை ஆகியவற்றால் இயக்கத்தின் ஏனைய பிரமுகர்கள் தயக்கம் காட்டி நின்றபோது புலிகள் இயக்கத்தில் பெண்களுக்கு என்றொரு தனிப் பிரிவை உருவாக்கினார். விடுதலைப் போரில் ஆண் போராளிகளுக்கு சமமானவர்கள் ஆக பெண் போராளிகள் நடத்தப்பட வேண்டும் – பங்களிப்பு வழங்க வழங்க வேண்டும் என்பதில் திடமாக இருந்து செயல்பட்டார்.
ஆனால் தலைவர் எதிர்பார்த்து இருந்தமையை காட்டிலும் பெண் புலிகள் வீறு கொண்டு செயல்பட்டனர். இலங்கை இராணுவத்துக்கு எதிராக மட்டுமன்றி இந்திய படைகளுக்கு எதிராகவும் போரிட்டு சாதனைகள் படைத்தனர். தலைவர் எதிர்பார்த்து இருந்தமையை காட்டிலும் அதிகமாகவே பங்களிப்புகள் செய்து இருந்தனர். இதை தலைவரே ஒப்புக் கொண்டு இருக்கின்றார்.
பெண்களுக்கு என்றொரு தனியான இராணுவ பிரிவு 1989 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இப்பிரிவின் தலைவியாக சோதியா நியமிக்கப்பட்டார்.
தியாகி திலீபன் 1987 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் உயிர் நீத்த தினத்தில்தான் இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. ஒக்டோபர் 06 ஆம் திகதி முதல் இப்பிரிவைச் சேர்ந்த போராளிகளுக்கு இராணுவ பயிற்சிகள் வழங்கப்படத் தொடங்கின

Geen opmerkingen:

Een reactie posten