இலங்கை - இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவாக இருந்தாலும், சீனா இலங்கையில் தீவிரமாக ஊடுருவியுள்ளது. இது இந்திய- இலங்கையின் உறவில் பாரிய சிக்கலை ஏற்படுத்துமென இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் லகன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய, அனைத்துலக கருத்தரங்கில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இதன்போது, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியாவால் இலங்கைக்கு போர்த்தளபாடங்களைக் கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே அப்போது ஏற்பட்ட இடைவெளியை, சீனா நன்கு பயன்படுத்தி கொண்டது. போருக்குத் தேவையான ஆயுதங்களை தயக்கமின்றி வழங்கி, இலங்கையின் முக்கிய கூட்டாளியாக சீனா மாறிவிட்டது.
இதனால் தான், இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், சீனாவுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான், இலங்கையில் இந்திய ஆதிக்கம் தொடரும் என லகன் லால் மெஹ்ரோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக , 13வது சட்டத்திருத்தத்தைக் நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவுக்கு இலங்கை உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது திடீரென பின்வாங்குகிறது. இதனால், அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுக்ககள் முடங்கியுள்ளன.
இலங்கை 13ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை எனின், அது இந்தியா – இலங்கை இடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லகன் லால் மெஹ்ரோத்ரா இந்திய வெளிவிவகாரச் செயலராகவும், கொழும்புக்கான இந்தியத் தூதுவராகவும், கம்போடியா மற்றும் இந்தோனேசியாவுக்கான ஐ.நா தூதுவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten