ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க ஆதரவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நோர்வேயும் ஆதரவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் சமாதான தூதுவரும், நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது காணாமல் போன உறவுகளை இன்னும் மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்று ஆப்டன்பொஸ்டன் செய்தித்தாளிடம் அவர் கருத்துரைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற்றது. ஆனால் இன்னும் சமாதானத்தில் வெற்றிப்பெறவில்லை.
இந்தநிலையில் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் சமாதானமாக வாழ்வதற்கான வழிமுறையை ஐக்கிய நாடுகள் சபை தேடியறியவேண்டும் என்று சொல்ஹெய்ம் கோரியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten