இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக் கூறதல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பபோவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது.
நேற்று பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பேரவையின் கூட்டதிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்த இந்தக் கூட்டத்தில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சிறிலங்கா பற்றியதும் ஒன்றாகும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten