தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 februari 2012

கூட்டமைப்பு முதுகில் குத்திய துரோகிகளே!!!


இங்கு பிரச்சனை சரணடைந்தவர்களை கொன்றது பற்றி,சர்வதேச விதிமுறைகள் மட்டுமல்ல அனைத்து மதங்களும் சொல்வதும் சரணடைந்தவனை மிகவும் கௌரவமான முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதே,இங்கோ சரணடைந்த போராளி ரமேஷ் ராணுவத்தால் விசாரணைக் குள்ளாவது வீடியோவில் உள்ளது,அப்போ அவர் எங்கே???வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எப்படி கொல்லப்பட்டனர்??நீங்கள் தமிழரை மீட்டீர்களோ இல்லையோ யுத்த மீறல்களை செய்துள்ளீர்கள்.கோயில்,தேவாலயம்,வைத்தியசாலைகளுக்கு செல்லடித்துள்ளீர்கள்.பெண்களின் மாரை அறுத்துள்ளீர்கள்,இறந்த போராளிகளை நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்தியுள்ளீர்கள்.சரணடைந்தவரை நிர்வாணப்படுத்தியும் கண்ணைக்கட்டியும் சுட்டுக் கொன்றுள்ளீர்கள். இவை உலக சட்டத்துக்கு,விதிக்கு எதிரானதால் நடவடிக்கை இதுவரை எடுக்காத ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளியாகிறது.இப்போதும் எடுக்கப்படாவிடில் ஐக்கியநாடுகள் சபை எதற்கு???அநியாயங்களை நியாயப்படுத்தவா??மனித உரிமைகள் பணியகம் எதற்கு??சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ,எல்லாம் என்ன செய்கின்றன.அறிக்கைகள் விட பெரும் பொருட்செலவில் அமைப்புகள் தேவையா??கூட்டமைப்பே  உண்மையான துரோகக் கூட்டம்,மக்கள் இவர்களை நம்பி முப்பது ஆண்டுகளின் பின்னும் வாக்கு அழித்து மந்தைகள் என்றாகினரே.கருணா,டக்லஸ் எதிரில் நின்று நெஞ்சில் குத்தியவர்கள். கூட்டமைப்பு முதுகில் குத்திய துரோகிகள்!!அன்று பிரபாகரனும் இன்று தமிழ் மக்களும் இவர்களால் ஏமாற்றப்பட்டனர்.இனியும் இவர்களை நம்பினால் நம்புவோரும் துரோகிகளே!!!



கூட்டமைப்பு எடுத்தது சரியான முடிவவாம்: பசிலின் பாராட்டு மழை !

ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். �தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்காது போயிருந்தால், அவர்களும் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பதில் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பு, புலிகள் என்ன செய்தனர் என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்க வேண்டும். பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாதுகாத்ததால் சிறிலங்கா அரசாங்கம் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகளை மீறவில்லை. விடுதலைப் புலிகளால் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளது. அவசரகாலச்சட்டம் இல்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை. ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர்களால் எப்படி அரசாங்கம் உறுதிமொழிகளை மீறியதாக குற்றம்சாட்ட முடியும் ?



ஜெனீவா மாநாட்டில் த.தே.கூட்டமைப்பு கலந்துகொள்ளாதாம் !

அடுத்த மாதம்(மார்ச்) ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றைக் கொண்டுவர சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இம் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என அறியப்படுகிறது. உள்ளகத் தகவலின் அடிப்படையில் திரு.சம்பந்தர் ஐயா அவர்களே இம் முடிவை எடுத்துள்ளார். புலம்பெயர் மக்களும், பல தமிழ் அமைப்புகளும் இலங்கைக்கு எதிராக போர் குற்ற பிரேரணை ஒன்றை மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவர பெரும் பாடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது தமிழர்கள் பல நடை பயணங்களையும் மேற்கொண்டு, ஜெனீவா நோக்கிப் பயணித்து வருகின்றனர்.

ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சில் மாநாடு நடக்கவிருக்கும் அதே தேதியில் அதற்கு முன்னதாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி, கொண்டுவர இருக்கும் பிரேரணைக்கு வலுச்சேர்க்கவும் தமிழர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர். ஆனால் இலங்கையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாரிய கட்சி என்ற வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பானது இதில் கலந்துகொள்ளவில்லை எனத் தீர்மானித்துள்ளது தமிழர்கள் நெஞ்சில் வேலைப் பாச்சும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. சமீபத்தில் சமபந்தர் ஐயா அவர்கள் மகிந்தரை அவசரமாகச் சந்தித்துள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியிருந்தது. இதனை அடுத்துத்தானா, இம் முடிவும் எட்டப்பட்டது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்கா, இந்தியா உட்பட பல உலக நாடுகள் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் புறக்கணிக்கவேண்டும் ? இறந்த 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கக்கூடாதா இல்லை அங்கே கொல்லப்பட்ட சிறுவர்கள், பெண்கள், கற்பழிக்கப்பட்ட எமது சகோதரிகளுக்கு ஞாயம் கிடைக்கக்கூடாதா ?

அதிர்வு இணையம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய நாடாழுமன்ற உறுப்பினர் ஒருவருடம் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டபோது, தமது அமைப்புக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். மற்றும், அப்படியே தாங்கள் சென்றாலும் அங்கே தம்மை பேச அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புலம் பெயர் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் முறையாக அழைத்துள்ளது. அவர்களும் முறைப்படி முதலில் விண்ணப்பித்து தமது அனுமதியைப் பெற்றுள்ளனர். ஆனால் இவற்றில் எல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஈடுபாடு இல்லையா ? மகிந்தரை திருப்த்தி படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இம் மாநாட்டைப் புறக்கணிப்பதாக தமிழர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே நாம் இங்கே ஒரு வாக்கெடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். தயவுசெய்து மக்கள் அனைவரும் இதில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மக்கள் தந்த வாக்குகளின் பெறுபேறுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நிறைவுபெற்றது !

Geen opmerkingen:

Een reactie posten