[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:06.19 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் (UNHCR) எதிர்வரும் 27ம் திகதி 19வது அமர்வை நோக்கி பலரது கவனமும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு சாதகமான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்து யுத்தக் குற்றங்களுக்கெதிரான விசாரணை ஒன்றினை நடத்த வேண்டுமென்று கோரியுள்ளது.
இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் வலுப்படவேண்டிய தேவைக்கு ஆதரவு வழங்கும் அதே வேளை - ஜ.நா செயளாளர் நாயகம் நியமித்த குழுவின் அறிக்கை வழங்கிய ஆலோசனைப்படி ஜ.நா அனைத்து குற்றங்களையும் விசாரிக்க ஒரு விசாரனைக் கமிசனை நியமிக்கவேண்டும் என்பதை கோருகிறோம். பேச்சுரிமை மாறுபட்ட கருத்துவைப்பதற்கான உரிமை முதலான உரிமைகளை மேம்படுத்துவதற்கு ஜ.நா வின் விசேட அதிகாரியை அழைக்கவேண்டும் என்று இலங்கை அரசை அழைக்கிறோம்.' என்ற தீர்மானத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இத் தீர்மானம் நிறைவேற்றுவதை தடுப்பதற்கு சிறிலங்கா அரசு பல்வேறு இராஜதந்திர வழியிலான குறுக்கீடுகளை ஏற்படுத்தி, தமக்குச் சார்பான ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத் தீர்மானத்தின் மீது செல்வாக்குச் செலுத்தி அதனைச் சிதைக்க முற்பட்டது குறிப்பாக சிங்களவரான நிராஜ் தேவா போன்ற பழமைவாத கட்சியின் ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு ஆதரவாக தீர்மானத்தை மாற்ற எத்தனித்தனர்.
எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை பாராட்டும் வகையான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசு தனது அனைத்து சக்திகளையும் பாவிக்க முற்பட்ட வேளையில் பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் கொன்சவேட்டிவ், தமிழ் சொலிடாரிற்ரி போன்ற அமைப்புக்களுடன் இணைந்து அழுத்தங்களை மேற் கொண்டு, சிறிலங்காவின் மேற்படி சதியினை முறியடித்து ஒப்பீட்டளவில் தமிழர் தரப்பிற்கு சாதகமான தீர்மானத்தை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten