சிறிலங்காவுக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படம் ஒன்றை சனல்-4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது சிறிலங்காப்படையினர் அட்டூழியம் புரிந்தததையும் போர்விதிகளை மீறியதையும்காட்சிகளாக உள்ளடக்கி, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றை முன்பு வெளியிட்டது.
குறித்த ஆவணப்படம் சிறிலங்கா அரசின் விமர்சனங்களுக்கு உள்ளானதுடன் கலக்கத்திற்கும் ஆளாக்கியிருந்தது. அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தது.இந் நிலையில் அதுபோன்றதொரு ஆவணப்படத்தை சனல்-4 வெளியிடவுள்ளது.
ஆனால் இந்த முறை புதிய காணொளியினை வெளியிடமுன்னர் தமது பார்வைக்கு தரப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என சிறிலங்கா அரசு சனல் 4 இனை கேட்டுக்கொண்டிருக்கின்றது.அப்படி செய்யாவிட்டால் தாம் சர்வதேச நீதிமன்றில் இறைமைக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடருவோம் எனவும் எச்சரித்துள்ளதாம் சிங்களம்.
Geen opmerkingen:
Een reactie posten