தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 februari 2012

பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் - சீ.பி. ரத்நாயக்க!!



தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் வீதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்புச் செயலாளரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
குழப்பம் விளைவிக்கும் நோக்கில் சில சக்திகள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களை நடத்த முயற்சிக்கின்றன. தேவையற்ற அச்சுறுத்தல்களை விடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் விலையேற்றம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பாதிக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில்,எரிபொருள் விலையேற்றத்தினைக் கண்டித்து, அரசாங்கம் எரிபொருளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது பஸ் கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten