அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி மியன்மார், ஈரான், சிரியா மற்றும் இலங்கை ஆகியவை தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் என்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து அதிகரித்து வரும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten