தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 februari 2012

ஜோன் ஆபிரஹம் நடிக்கும் யாழ்ப்பாண எல்.டி.டி என்னும் திரைப்படம் !


பிரபல பாலிவுட் நடிகர் ஜோன் ஆபிரஹம் அவர்கள் எல்.டி.டி தொர்பாக ஒரு படத்தை இயக்கி அதில் தானே நடிக்கவும் உள்ளார். சின்னத்திரையில் நடித்து புகழ்பெற்ற ஜோன், தற்போது தனது சொந்த தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவர் தனது திரைப்படத்துக்கு யாழ்ப்பாணம் எனப் பெயர் வைத்துள்ளார். விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை அங்கே இருந்த ஒரு விதலைப் புலிகளின் உறுப்பினர், தொடர்பாக இப் படம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய திரையுலகில் பல, படங்கள் ஈழம் தொடர்பாக எடுக்கப்பட்டாலும், விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை குறித்து முதல் முதல் வெளியான படம் கன்னத்தில் முத்தமிட்டால் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் இத் திரைப்படத்திலேயே புலிப் போராளி ஒருவர் குறித்த கதை, திரைப்படமாகவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.


Geen opmerkingen:

Een reactie posten