தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற பெரும்பாலான அரசியல் எதிர்வு கூறல்கள் தவறானவை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டு உள்ளது.
சுரேஸ் பிரேமச்சந்திரன் கடுமையான எதிர்வு கூறல்களை முன்வைப்பார் என்றும் ஆனால் அவரால் முன்வைக்கப்படுகின்ற எதிர்வு கூறல்களில் அநேகமானவை ஒருபோதும் நடந்ததாக இல்லை என்றும் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இந்த ஆவணம் 2005 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி அனுப்பப்பட்டு உள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten