இந்த நாட்டில் தமிழர்களுக்கு உரித்தான இறைமை மறுக்கப்பட்டதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் இடம்பெற்றிருந்தன!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் இன்று நடத்தப்பட்ட “ஜனநாயக அடிப்படையில் அரசியல், சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான” விழிப்புணர்வு கருத்தரங்கில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டதுடன், இந்த கருத்தரங்கு வெற்றிகரமானதாகவும் மாறியுள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான கருத்தரங்கு மாலை 4.30 மணிவரையில் நடைபெற்றது.
இதில் “13வது அரசியலமைப்பு” தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கே.குருபரன் அவர்களும், “இனப்பிரச்சினை, மற்றும் தீர்வு” தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களும், “மனிதவுரிமைகள்” தொடர்பில் கே.தயாபரன் அவர்களும் கருத்துரைகளை வழங்கினர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சிறீதரன், சரவணபவன், அரியநேத்திரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் சுமார் 200ற்கும் மேற்பட்ட பொதுமக்களும், தமிழ் தேசிய ஆர்வலர்களும், கலந்து கொண்டு மாலை வரை கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொண்டனர்.
யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் சுதந்திரமாகவும், எமது தனித்துவங்களை உரக்கச் சொல்வதாகவும் இந்த கருத்தரங்கு அமைந்திருந்தது.
மேலும் இக்கருத்தரங்கில் பிரதம விருந்தினர் இரா. சம்பந்தன் உரையாற்றிய போது,
இந்த நாட்டில் தமிழர்களுக்கு உரித்தான இறைமை மறுக்கப்பட்டதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் இடம்பெற்றிருந்தன. இதனை கடந்த 1956ம் ஆண்டு நடந்த அனைத்து தேர்தல்களிலும் கூறிவருகின்றனர்.
அதாவது இந்த நாட்டிலுள்ள ஒற்றையாட்சி முறையில் நாம் சம பிரஜைகளாக வாழமுடியாது. எனவே அது நீக்கப்பட்டு சமஸ்டி முறை உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், அல்லது ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசியல் சாசன ரீதியாக ஒழுங்குகள் செய்யப்படவேண்டும்.
பெரும்பான்மை இனம் தாம் பெரும்பான்மையாக உள்ள காரணத்திற்காக சிறுபான்மை இனத்தை ஆட்சி செய்ய முடியாது. அவ்வாறு புரிந்தால் அந்த சிறுபான்மை இனத்தின் இறைமை மறுக்கப்படுகின்றது. இதுவே இங்கு நடந்தது. அதனாலேயே இங்கு போராட்டங்களும், சகல பிரச்சினைகளும் ஏற்பட்டன.
ஒரு நாட்டில் வெவ்வேறு இனங்கள், மக்கள் வாழ்வதாக இருந்தால், அவ்வகையான மக்களுக்கு இயைவாக இருக்கவேண்டும். அவ்விதமான தீர்வொன்று ஏற்படாமையினால்தான், யுத்தம் வெடித்தது. காரணமில்லாமல் ஒரு யுத்தம் ஆரம்பிக்கவில்லை.
ஆனால் இன்று யுத்தத்தின் பின்னர் நாம் போராட்டத்தின் அடுத்த நிலைப்பாட்டிற்கு சென்றிருக்கின்றோம். யுத்தம் நடந்ததற்கு அடிப்படையான காரணம் தமிழர்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்பட்டது,
ஒரு அரசியல் தீர்வு இந்த நாட்டில் ஏற்படவேண்டும். ஜனநாயக உரிமைகள், மனிதவுரிமைகள் மதிக்கப்படவேண்டும். இலங்கை அரசினால் என்ற காரணம் ஒருபக்கம் விசாரணை குற்றங்கள், மறுபுறம். இந்த சிபார்சுகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு என்ன செய்யப்போகின்றதென்ற கேள்வி. அதை எவ்வாறு செய்யப் போகின்றோம் என்ற கேள்வி சர்வதேசத்தின் முன்னால் இன்றுள்ளது.
நாம் தமிழ் மக்கள் சார்பாக சர்வதேசத்திடம் கேட்பது, இந்த நாட்டில் நாம் வாழ்ந்துள்ளோம். மற்றவர்களைப்போல், அவர்களை விடவும் உரிமைகளை கேட்டதற்காக பாரிய அழிவுகளை சந்தித்திருக்கின்றோம்.
இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் இனப்படுகொலை நடைபெறும். வன்முறை நடைபெறும். அதற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது. அதிலிருந்து எம்மை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை, இதையே பகிரங்கமாக சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்,
இனிமேல் சர்வதேசம் எமது பிரச்சினையை எந்தெந்த வகையில் தீர்க்க முடியுமோ அந்தந்த வகையில் தீர்த்து வைக்கவேண்டும், அது அவர்களது கடமை என்றார்.
மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம் - இரா.சம்மந்தனின்
Geen opmerkingen:
Een reactie posten