தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 februari 2012

நல்லூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கராஜாவை வெளியேற்றக் கோரி யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் !!!


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சம்மந்தியாகிய நல்லூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கராஜாவை வெளியேற்றக் கோரி யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் இன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லாது தங்களது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர்.

நல்லூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கராஜாவினால் அமைச்சரின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றப்படும் அத்தனை லீலைகளையும் பகிரங்கப்படுத்திய துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டதுடன் மேற்படி பகிஷ்கரிப்பிலும் மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.



பெண் பிள்ளைகளின் பின்னால் தட்டுவது, சட்டையை உயர்;த்திப் பார்ப்பது, மாணவிகளின் வீட்டுக்குச் சென்று தகாதமுறையில் நடந்து கொள்வது, ஆசிரியைகளைப் படம் எடுப்பது என இந்த மாணிக்கராஜா மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டிருக்கின்றார்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள்.

நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் பாடசாலையில் மாணவிகளுக்கு கல்வி புகட்ட வேண்டிய ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்களுக்கு மாணவிகளே துண்டுப் பிரசுரம் மூலம் கல்வி புகட்ட வேண்டிய நிலையில் தற்போது யாழ்ப்பாணம் மாறியுள்ளது.

எத்துறையை எடுத்துக் கொண்டாலும் தற்போது யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தாராளமாக மலிந்து கிடக்கின்றன.

அதிலும் கல்வித் துறையில் ஏற்படும் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதி;ர்காலத் தமிழினத்தின் நிலைமையில் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

அதனைப் புரிந்து, நீதித்துறை இவ்வாறானவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுப்பது தற்காலத்தில் இன்றியமையாததாகவுள்ளது.

இவ்வாறு துண்டுப் பிரசுரம் மூலம் மாணவிகளின் பெற்றோர்கள் அறிக்கை விடுவதை விடுத்து, மாணவிகள் தமது கல்வி நடவடிக்கைகளைப் பகிஷ்கரிப்பதைத் தவிர்த்து நீதித்துறையின் முன் தகுந்த ஆதாரங்களுடன் இது தொடர்பில் முறையிட்டு உரியவருக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதே சாலப் பொருத்தம்.

அதை விடுத்து உங்கள் கல்வியைப் பகிஷ்கரிப்பு மூலம் பாழாக்கி, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் எதிர்காலத்தையும் நடுத்தெருவில் விடுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

கல்வியைப் புகட்ட வேண்டிய ஆசான்கள் தம்மிடம் வரும் மாணவிகள் மீது தங்களின் காமத்தைத் தீர்த்துக் கொள்ள நினைப்பது எவ்விகையில் மன்னிக்க முடியாதது.

காலாதி காலமாகத் தமிழ் மக்கள் மனங்களிலும் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஒரு ஒழுங்கு முறைப்படி வணங்கி வந்தமை ஒரு சிறப்பு.

அந்தச் சிறப்பு இன்று சின்னாபின்னமாகி, சீரழிந்து ஆசான் எப்படியிருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் எடுத்துக் காட்ட வேண்டிய ஒரு கீழ்த்தரமான, கேவலமான நிலைமையை இன்றைய ஆசிரியர்கள் தோற்றுவித்துள்ளனர்.

மேற்படி கேட்டக் கல்விப் பணிப்பாளர் மீது மாணவிகளினாலும், அவர்களின் பெற்றோர்களாலும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையில் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் மீது நீதி பரிபாலனம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவிகளின் பெற்றோர்களின் வேண்டுகோளாகவுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten