தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 februari 2012

விக்கிலீக்ஸ்: புலிகளுக்கு வரி செலுத்த மறுத்த சுவிஸ் பிரஜை படுகொலை!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வரி கொடுக்கத் தவறியமையால் சுவிஸ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டு இருக்கின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது
பிரதித் தூதுவராக இருந்த James F. Entwistle 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்த அறிக்கையை அனுப்பி இருக்கின்றார்.இதில் கூறப்பட்டு இருப்பவை வருமாறு
சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமாங்கத்தில் உள்ள வீட்டில் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி கைக்குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்து உள்ளார். 61 வயது உடைய Ken Ulrich என்பவர் மீது இனம் தெரியாத நபர் கைக்குண்டு வீசி கொன்றார் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள்தான் இக்கொலைக்கு பொறுப்பு என்று சில ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை நடத்துகின்றார்கள்
சுவிஸ் தூதரகத்தை சேர்ந்த அலுவலர் ஒருவர் எமக்கு கருத்துக் கூறுகையில் Ken Ulrich சுவிஸ் தூதரகத்தில் பதிவு மேற்கொண்டு இருக்கவில்லை என்றும் தமிழ் விதவை ஒருவரை மணந்து - விதவையின் மூன்று பிள்ளைகளை பராமரித்துக் கொண்டு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார் என்றும் புலிகளுக்கு வரி செலுத்த மறுத்தமையால் கொல்லப்பட்டு இருக்கின்றார் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஆனால் இவர் ஏன் கொல்லப்பட்டார்? என்பதை உறுதிப்படுத்த மட்டக்களப்பைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள், புலிகள் இயக்க வட்டாரங்கள் ஆகியோரால் முடியவில்லை.
புலிகள் இப்படுகொலையை செய்திருக்கின்ற பட்சத்தில் மேற்குலக நாட்டைச் சேர்ந்த ஒருவரை புலிகள் இலங்கையில் இலக்கு வைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten