21 ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாதுகாப்பும் அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும்- " இலங்கை பற்றி ஒரு ஆய்வு" என்ற தலைப்பிலான மாநாடு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் 19ஆவது அமர்வு பெப்ரவரி 27 முதல் மார்ச 23 வரை ஜெனிவாவில் இடம்பெறவிருப்பதை அனைவரும் அறிவோம்.
இவ் அமர்வின் போது, இலங்கையில் 2009 ஆண்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க ஒரு சுயாதீனமான அனைத்துலக ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பது அனைவரின் விருப்பாகும்.
இது ஒரு உலகத்தின் குரலாக இருந்த போதும், சிறிலங்கா அரசு செவி மடுப்பதாக தெரியவில்லை. மாறாக இலங்கை அரசின் பாதுகாப்பு செயலர் மேற்குலக நாடுகளில் தான் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உள்ளது. எமது நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை என்கிறார்.
நாமே விசாரணைகளை மேற்கொள்ளுவோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய வல்லமை எம்மிடம் உண்டு. போர்க்குற்றத்திற்கான அறைகூவல்கள் வலுப்பெற்று வரும்போது இப்பொழுது இராணுவ நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்கப் போகின்றோம் என்கின்றது இலங்கை அரசு.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுயாதீனமான அனைத்துலக ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனும் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் கனடியமக்களும் இவ்விடயத்தில் முழுமையான விளக்கம் பெற்று மனித உரிமை தொடர்பாக அனைத்துலக பரிமானங்களை புரிந்து கொண்டு, ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டு நமது மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்க வழிவகுக்கபட வேண்டும்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுயாதீனமான அனைத்துலக ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனும் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் கனடியமக்களும் இவ்விடயத்தில் முழுமையான விளக்கம் பெற்று மனித உரிமை தொடர்பாக அனைத்துலக பரிமானங்களை புரிந்து கொண்டு, ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டு நமது மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்க வழிவகுக்கபட வேண்டும்.
அவ்வாறன வழியில் இம்மாநாட்டில் உரையாற்றும் பேரறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
கலந்து கொள்ளவிருக்கும் பேராளர்கள் பற்றிய விபரங்களையும் அவர்கள் ஆற்றவிருக்கும் உரைகளின் மையக்கருத்துகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.
லண்டனிலுள்ள மனித உரிமைக்கான தமிழர் மையத்தின் அனைத்துலக செயற்பாட்டின் பொறுப்பாளராக விளங்கும் டேயிட்றி மக்கொனல் அம்மையார் 21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகளை பாதுகாப்புக்கான பொறிமுறைகள் பலனளிக்குமா? பகுக்கப்படாத, பிரிக்கமுடியாத, மறுக்கப்படாத அனைவருக்கும் உரித்தான மனித உரிமைகள் நிலைபெறுமா? போன்ற கருத்துகளை ஆராய்வார்.
கொங்கொங்கில் அமைந்திருக்கும் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் டானிலோ றெய்ஸ் எனும் மனித உரிமை வல்லுநர் இலங்கையில் அரிசியலமைப்பு சட்டம் முதல் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே தீர்வும் மனித உரிமையும் பாதுகாக்கப்படும் எனும் பொருளில் கருத்துகள் வழங்குவார்.
வுனிபெக்கிலிருந்து வரும் சட்டவல்லுநர் டேவிட் மெத்தா அவர்கள் இலங்கை அகதிகள் விடயத்திலும் அனைத்துலக அகதிகளுக்கான பொறிமுறை செயல்படவில்லை என்பதையும் மனித உரிமையை மதிக்காத நாடுகளிலிருந்து வரும் அகதிகள் காப்பாற்றபட வேண்டும் எனும் கருத்தில் பேசுவார்.
உலகத் தமிழ் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். யே இம்மனுவேல் அடிகள் 60 ஆண்டுகளில் மனிதஉரிமை மீறல்கள் அதை எதிர்கொள்வதற்கான நடைமுறைகள், தமிழரின் அர்ப்பணிப்பு போன்ற விடயம் பற்றி பேசுவார். அமெரிக்காவில் நியுபோர்க் நகரில் ஐ.நா வின் சிறிலங்கா வதிவிடப் துணை பிரதிநிதியாவும், முள்ளிவாய்க்காலில் 58ஆம் படைப்பிரிவை வழிநடத்தி, பாரிய அளவில் மனிதக் கொலைகளையும் பேரவலங்களையும் ஏற்படுத்திய சவேந்திர சில்வாக்கு எதிரான வழக்கை தொடர்ந்தவரான அலி பெய்டூன் அவர்கள் அனைத்துலக காப்புரிமை பற்றியும் குற்றச்சாட்டுகளிருந்து அரச பதவியிலுள்ளவர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் வாதிடுவார்.
யுரிக்கா கல்லூரியில் சட்டத்துறைக்கு பேராசிரியராக இருக்கும் தியடோர் ஓரிலின் அவர்கள் ஆர். ரூபி என அழைக்கப்படும் பாதுகாப்புக்கு பொறுப்பு எனும் பொறிமுறை பற்றியும் இலங்கையில் இப் பொறிமுறையை அ.நா பயன்படுத்த தவறிவிட்டது பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் எடுத்துரைப்பார்.
மேலும், மனிரோபா பேராசிரியர் சிறிரஞ்சன் அவர்கள் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து விசாரணை ஆணையங்களினதும் தோல்விகள் பற்றியும் இறுதியாக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் எதிர்காலம் அவற்றின் பலாபலன்கள் பற்றியும் ஆராய்வார்.
அனைத்துலக மன்னிப்பு சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோன் ஆர் கியு இலங்கையில் இனங்களிடையே உறவுகள் புதிப்பிக்கப்படுமா என்பது பற்றி பேசுவார். அனைத்து நிகழ்வுகளையும் போரால் பாதிக்கப்பட்டோரருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்தின் தலைவரான அன்ரன் பிலிப் அவர்கள் நெறிப்படுத்துவார்.
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்
Geen opmerkingen:
Een reactie posten