தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில், நேற்றையதினம் நடைபெற்ற குண்டுத் தாக்குதல் இஸ்ரேல் ராஜதந்திரிக்கு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என அந் நாட்டுப் பொலிசார் தெரிவித்துள்ளனர். 3 ஈரான் நாட்டவர்கள் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் ஒருவர் தனது பையில் குண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு செல்லும்வேளையில் அது தற்செயலாக வெடித்துள்ளது. இதனால் அவர் இரு கால்களையும் இழந்து ரோட்டில் வீசப்பட்டார். இதனை அடுத்து மற்றைய 2வரும் விமான நிலையம் சென்று அந் நாட்டிலிருந்து தப்பிக்க முனைந்துள்ளனர். அதில் ஒருவரை தாய்லாந்துப் பொலிசார் கைதுசெய்துள்ளபோதும் மற்றுமொருவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தற்போது தாய்லாந்துக்குச் சென்றுள்ள இஸ்ரேலிய இராஜதந்திரி ஒருவரை குறிவைத்து இத் தாக்குதல் நடைபெறவிருந்ததாகவும், ஆனால் இக் குண்டு வேறு இடத்தில் தற்செயலாக வெடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் இஸ்ரேலிய ராஜதந்திரி ஒருவரின் மனைவி பயணிக்கவிருந்த காரில் குண்டு வெடித்ததும் யாவரும் அறிந்தவிடையம். தற்போது தாய்லாந்தில் ஈரானியர்கள் இக் குண்டை வெடிக்கச்செய்தமை, ஈரான் மற்றும் தாய்லாந்துக்கான நட்புறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
ஆனால் ஈரான் அரசு இக் குண்டுவெடிப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமக்கும் இக் குண்டுவெடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஈரான் அரசு, இது ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது. இரு நாடுகளில் நல்லுறவைப் பாதிக்கும் வகையில் இது நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்படுவதாகவும், ஈரானுக்கு எதிராக ஸ்ரேலையும் திருப்ப வல்லரசு நாடுகள் முனைவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு பல உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது யாவரும் அறிந்தவிடையம். ஈரானில் இருந்து மிகவும் சொற்பமான நாடுகளே எரிபொருளை இறக்குமதிசெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இந் நாடுகளின் வரிசையில் இந்தோனேசியாவும் உள்ளடங்கும். ஈரானியர்கள் இந்தோனேசியாவில் இவ்வாறு தாக்குதல் நடத்தினால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவு முறிவடைவதோடு, ஈரானில் இருந்து இந்தோனேசிய எரிபொருட்களையும் இறக்குமதிசெய்யாமல் விடும் என்று ஒரு வல்லரசு கணக்குப்போட்டு செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. ஈரான் மீது போர் தொடுக்க ஏதுவாக ஒரு புறச்சூழலை ஏற்படுத்த பல நாடுகள் இரகசியத்திட்டங்களைத் தீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten