தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 februari 2012

பாலாவின் இறப்புக்கு பின் நம்பிக்கை இழந்த புலம்பெயர் தமிழர்! நோர்வே இராஜதந்திரிகள் - பிரபாகரனின் மரணத்துக்காக காத்திருந்த ராகுல் காந்தி!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்த பிற்பாடு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சுற்றி இருப்பவர்கள் மீது புலம்பெயர் தமிழ் சமூகம் அவநம்பிக்கை கொண்டு விட்டது என நோர்வே இராஜதந்திரிகள் அவதானித்து இருந்தனர்.
புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒரு சாராருடன் நோர்வே தரப்பினர் பேச்சுக்களில் ஈடுபட்டபோது இதைக் கண்டு கொண்டனர்.

இந்த அவதானத்தை அமெரிக்க இராஜதந்திரிகளுக்கும் சொல்லி இருக்கின்றனர்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன.
உலகின் மோசமான கிரிமினல் பிரபாகரன் என்று எழுதிய இந்தி பத்திரிகை!
உலகின் மிக மோசமான பயங்கரவாதியும், கிரிமினலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் ஆவார் என்று இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற இந்தி தினசரிகளில் ஒன்றான DAINIK HINDUSTAN 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி எழுதி உள்ளது.

இப்பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான பிரவீன் குமார் என்பவர் இவ்வாறு எழுதி இருக்கின்றார்.

-இலங்கையில் இடம்பெற்ற 70000 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறப்புகளுக்கு புலிகள் இயக்கமே பொறுப்பு. என்னதான் பிரபாகரனை பற்றி உலகம் நினைத்துக் கொண்டாலும் சரி பிரபாகரனின் ஆட்கள் அவரைக் கும்பிடுகின்றனர்.
பிரபாகரன் ஏற்கனவே பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்து விட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரபாகரனின் தலையை இலங்கை அரசு இம்முறை தவற விடாது.
பிரபாகரன் மரணத்துக்கு பயந்தவர் அல்லர், அவரும் அவரது போராளிகளும் சயனைட் குப்பிகளுடன் எப்போதும் காத்திருக்கின்றார்கள், உண்மையிலேயே வலிமை வாய்ந்தவர்கள்.
ஆனால் இந்த யுத்தம்தான் புலிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. இம்முறை புலிகள் மாட்டுப்பட்டு விட்டார்கள் என்றே தோன்றுகின்றது.-
இவ்வாறு தொடர்ந்து எழுதி இருக்கின்றார்.
பிரபாகரனின் மரணத்துக்காக காத்திருந்த ராகுல் காந்தி!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்று அமெரிக்காவுக்கு தெரிய வந்து உள்ளது.

 பிரபாகரனின் மரணத்தைக் காண்கின்றமைக்கு ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்றும் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கு பழிவாங்க கறுவிக் கொண்டு இருந்தனர் என்றும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாநிதி மாறன் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தார் என துணைத் தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் உள்ளது.

 இதனால் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் இடையில் பிளவு காணப்படுகின்றது என்றும் மாறன் சொல்லி இருக்கின்றார்.

Geen opmerkingen:

Een reactie posten