பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று 'இலங்கையில் மனித உரிமைகள்' என்ற விடயம் தொடர்பில்
விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நடந்து முடிந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு, இதுவரையில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது பல தரப்புக்களிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள மனித உரிமைக் கூட்டத் தொடரில் இது தொடர்பான கேள்விகளும் விவாதங்களும் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியப் பாராளுமன்றம் இன்று இது குறித்து விவாதிப்பது தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
http://www.4tamilmedia.com/newses/world/3554-2012-02-22-09-44-13
http://www.4tamilmedia.com/newses/world/3554-2012-02-22-09-44-13
Geen opmerkingen:
Een reactie posten