மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குச் சொந்தமான வீடு ஒன்றினை, இலங்கை அரசு கையகப்படுத்த முனைவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா தமது பதவிக்காலம் முடிந்த பின்னர் இந்த விட்டிலேயே தங்கியிருந்தார். கொழும்பு 7 வார்ட் பிளேஸ் இலக்கம் 66 என்னும் முகவரியில் அமைந்துள்ள இந்த வீட்டிலேயே அவர் இறுதிவரை இருந்து இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவருக்கு சொந்தமான வீடை இறைவரித் திணைக்கள ஆணையாளரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக மாற்றுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஜே. ஆரின் குடும்பத்தினர் தங்களது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten