தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 februari 2012

ரஷ்யா- ஈரான் -இந்தோனேசிய இராணுவ அதிகாரிகள் யாழ் விஜயம் !


ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகப், பிரேரணை ஒன்றை மேற்குலக நாடுகள் கொண்டுவரும் நிலையில், தமது ஆதரவு எப்போது இலங்கைக்கு உள்ளது என்பதனை மறைமுகமாகக் காட்டும் வகையில் ஈரான், ரஷ்யா மற்றும் இந்தோனேசிய இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சென்று இலங்கை இராணுவத் தளபதிகளுடன் உரையாடி உள்ளனர். இந்த வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் எவரையும் சந்தித்து உரையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். யாழ்ப்பாணத்துக்கு யார் சென்றாலும் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொக்கீஷம் போல, தாம் தடுத்து வைத்துள்ள புலிகள் உறுப்பினர்கள் சிலரை இராணுவம் காட்டுவது வழமையான செயலாக அமைந்துவிட்டது.

அதற்கமைவாக, வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் புலிகள் உறுப்பினர்களையும் சந்தித்துள்ளனர். வழமைபோல நல்லூர்கோவில், மற்றும் நாக விகாரை என்பனவற்றை அவர்களுக்கு இலங்கை இராணுவம் சுற்றிக்காட்டியுள்ளது. இது இவ்வாறு இருக்க இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கோத்தபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவர் தெல்லிப்பழையில் உள்ள மகாஜனாக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3 மாடிக் கட்டிடம் ஒன்றைத் திறந்துவைக்க இருக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. மேலும் யாழில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகள் உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக யாழ் செய்திகள் மேலும் தெரிவிக்கின்ற.






Geen opmerkingen:

Een reactie posten