ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷ சிங்கப்பூர் சென்றிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை இரு முறை சென்று பார்த்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விசேட சிகிச்சையொன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷ, மவுண்டன் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் துமிந்த சில்வா எம்.பி.யின் நலன் விசாரித்ததாக சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகத் தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்தின.
ஜனாதிபதியின் பிரச்சனத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சகோதரரும், ஏ.பி.சி. நிறுவனத்தின் பணிப்பாளருமான ரெய்னோ சில்வாவும் அங்கிருந்துள்ளார். இதன்போது துமிந்த சில்வா எவ்வித சிரமமும் இன்றி ஜனாதிபதியுடன் உரையாடியதாகத் தெரியவருகிறது. முழுமையாக குணமடையாத போதிலும் விரைவில் துமிந்த சில்வாவிற்கு தனது பணிகளை வழமைபோல் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என அங்கிருந்த வைத்திய நிபுணர்கள் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளனர்.
விசேட சிகிச்சையை முடித்துக்கொண்டதுடன், சிங்கப்பூர் அரச உயர்தரப்பினரையும் சந்தித்த பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷ நேற்றைய தினம் நாடு திரும்பினார். இந்த விமானத்தில் ஏ.பி.சி நிறுவனப் பணிப்பாளர் ரெய்னோ சில்வாவும் நாடு திரும்பியுள்ளார்.
athirvu!
Geen opmerkingen:
Een reactie posten