பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறுபேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு மீதான தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் இத்தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளதாக பரிஸில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி சேர்த்தார்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பரிதி என்று அழைக்கப்படும் எம்.நடராசா மதிந்திரனுக்கு 5வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேத்தா என்று அழைக்கப்படும் அரவிந்தன் துரைசுவாமிக்கு 5வருட சிறைத்தண்டனையில் 18மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யோகராசா சிவதர்சனுக்கு 3வருட சிறைத்தண்டனையில் ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்திரேசுப்பிள்ளை வின்சட், லோறன்ஸ் செல்வராசா அல்லது புலேந்திரன், எம்.ரவிமாணிக்கம் ஆகியோருக்கு 2வருடசிறைத்தண்டனை 6மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten