தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 februari 2012

25 மில்லியன் டாலரை ஈரானிடம் கோட்டைவிட்ட இலங்கை !


இலங்கையின் மொத்த எரிபொருள் இறக்குமதியில் 93% சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதிசெய்யப்படுகிறது. பீப்பாய்களில் வரும் மசகெண்ணையை இலங்கையில் உள்ள சில வடிகட்டும் நிலையங்கள் வடிகட்டி மண்ணெண்ணை, பெற்றோல் மற்றும் டீசல் எனப் பிரித்தெடுக்கின்றனர். தற்போது அமெரிக்கா ஈரான் மேல் விதித்திருக்கும் தடையால், ஈரான் கப்பல்கள் அந் நாட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை தோன்றியுள்ளது. இலங்கை அரசு பெரும் நெருக்கடிக்குள் சிக்கித்தவிப்பதோடு பிற நாடுகளில் இருந்து மசகெண்ணையையும் ஏனைய எரிபொருட்களையும் இறக்குமதிசெய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈரான் - இலங்கை எரிபொருள் இறக்குமதி ஒப்பந்தம் மூலமாக, எரிபொருட்களை சற்றுக் குறைந்த விலையில் இலங்கை இதுவரை காலமும் பெற்றுவந்தது.

இலங்கையில் இருந்து பாரிய அளவில் தெயிலை ஈரானுக்கு ஏற்றுமதிசெய்யப்படுவது வழக்கம். அதேபோல ஈரான், மசகெண்ணையை சுமார் 3 வார வட்டியில்லாத கடனாகக் கொடுக்க அதனை விற்று பணம் சம்பாதித்தது இலங்கை அரசு. ஆனால் தற்போது நிலை தலை கீழாக மாறியுள்ளது. அமெரிக்க போர்கப்பல் எப்போது ஈரான் நாட்டிற்கு அருகே சென்றதோ, அதேநேரம் ஈரானியர்கள் விழித்துக்கொண்டார்கள். அவர்கள் கடனாக பலநாடுகளுக்கு கொடுத்த எரிபொருளின் பணத்தை அவர்கள் உடனே வசூலித்துவிட்டார்கள். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இலங்கை அரசானது சும்மார் 25 மில்லியன் டாலர் பெறுமதியான தெயிலையை ஈரானுக்கு ஏற்றுமதிசெய்துள்ளது. இப் பணத்தை உடனே பெற்றுக்கொள்ளாமல், அதற்குப் பதிலாக எரிபொருட்களை அனுப்பும்படி கூறியுள்ளது.

ஆனால் தற்சமயம் ஈரானில் இருந்து எந்த ஏற்றுமதியும் மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதால், இந்த 25 மில்லியன் டாலர் பணமும் ஊசலாடுகிறது. இப் பணத்துக்குச் சமமான எரிபொருட்களை இதுவரை ஈரானால் அனுப்பிவைக்க முடியவில்லை என அல்ஜசீரா தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. இலங்கையானது இறக்குமதியிலும் பாதிப்படைந்து, தெயிலை ஏற்றுமதியிலும் பாதிப்படைந்துள்ளதாக அந் நாட்டின் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கை அரசோ இது குறித்து எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஈரான் ஒரு சிறிய நகர்வை மேற்கொண்டால் கூட அந் நாடு மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா காத்துகொண்டு இருக்கிறது.

அதேபோல பல உலக நாடுகளில் ஈரான் அரசின் சொத்துக்களும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இந்த 25 மில்லியன் டாலரை இலங்கைக்கு ஈரான் எவ்வாறு கொடுக்கப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.



Geen opmerkingen:

Een reactie posten