வணக்கம் பாருங்கோ, தேர்தல் அண்மையில வருதோ, இல்லயோ, தேர்தலுக்காக இல்லாட்டிக்கும் கட்சிகளுக்காக ஆக்களச் சேக்கிற எங்கட ஆக்கட வேலையள் அமோகமா நடக்குது கண்டியளே? என்ன பாருங்கோ குழப்பமா இருக்கோ ? தமிழரசுக்கட்சிக்கு ஆக்களத் திரட்டுறதுக்கான வேலையள் மறைமுகமா நடந்து கொண்டே இருக்குது கண்டியளோ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில எலெக்சன் கேட்டு வெண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இருக்கினம் எல்லே? ஓம் பாருங்கோ.. அவையளத் தனித்தனியா சந்திச்சு மண்டையக் கழுவிக் கழுவிக் கடைசில பாருங்கோ கிளிநொச்சியில ஒரு கருத்தரங்கையும் நடத்தினவையாம் எல்லே?
ஓம் பாருங்கோ அந்தக் கருத்தரங்கு, அரசியல் கருத்தரங்கில்ல பாருங்கோ, தமிழரசுக்கட்சிக்குப் பின்னால நிக்கக்கூடிய ஆக்கள ஒண்டு திரட்டி சந்திப்பு நடத்திறது தான் நோக்கம் கண்டியளோ? ஆனால் பாருங்கோ, சந்திப்பின்ர நோக்கம் எல்லாம் மாறி, கடைசியில அங்க வில்லங்கம் எல்லே நடந்திருக்குது கண்டியளே ? என்ன எண்டு கேக்கிறியளே? அங்க போன யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் 13ஆவது திருத்தச் சட்டத்தில உள்ள ஓட்டையள சுட்டிக்காட்டி இந்தத் திருச்சட்டத்த நாங்கள் ஏற்கக் கூடாது எண்டு சொல்லியிருக்கிறார் என்ன? அப்ப பாருங்கோ, சுமந்திரன் ஐயா அதச் சரி எண்டும் நான் 20 வருசமா சட்டத்துறையில பெரீய..(!) ஆளா இருக்கிறன் எனக்கு இதுகளப் பற்றி விளங்காதோ? எண்டு கேட்டிருக்கிறார் என்ன?.
அதேநேரம் சம்பந்தன் ஐயா இறையாண்மை தொடர்பா சொன்ன கருத்துக்களில தவறிருந்ததா தங்களுக்குத் தெரிஞ்சுது எண்டு நிகழ்ச்சியில இருந்த ஒண்டு ரண்டு பேர் சொல்லிச்சினம். இவையள் ஒவ்வொருவரும் பிடுங்குப்பட நிகழ்ச்சிய ஒழுங்கு செய்த சிறீதரன் ஐயா வந்து சரியா திக்குமுக்காடிப் போனாராம் கண்டியளே ? ஐயாக்களும் குழம்பி, நிகழ்ச்சிக்கு வந்தவையளும் குழம்பினால் அந்த மனிசன் என்னதான் செய்யிறது என்ன ? ஆனால் பாருங்கோ எல்லாரும் குழம்பிப் போய் இருக்க, மாவை ஐயா தான் பாருங்கோ உணர்ச்சி வயமா பேசி.. ஆக்களத் திருப்திப்படுத்தினவராம் என்ன ?
நிகழ்ச்சி தொடங்கின நேரம் முதலே நிகழ்ச்சியில பங்கெடுக்க போன எங்கட சனம் வந்து சந்தேகங்கள தயங்காமல் கேட்டிருக்கினம் என்ன ? தொடந்து கேள்விக்கு மேல கேள்வியள் போக, சுமந்திரன் ஐயா திண்டாடிக் கொண்டிருக்க தலைவர் ஐயா கடுப்பாகியிட்டாராம் என்ன ? எழும்பி நிண்டு கதைக்க ஏலாது எண்டு கதிரையில இருந்து கதைச்ச சம்பந்தன் ஐயா கடுப்பில எழும்பி மேசயில ரண்டு குத்துக் குத்தி பதில் சொன்னவராம் என்ன ?கனடாவிலயும், லண்டனிலயும் சுமந்திரன் ஐயாவின்ர உரைக்கு பரவலான வரவேற்பு எண்டு சொல்லக் கேள்வி கண்டியளே ? ஆனால் பாருங்கோ கிளிநொச்சியில எங்கட சனம் நல்ல தெளிவா இருக்குது எண்டத இவையள் புரிஞ்சு கொண்டிருப்பினம் எண்டு நினைக்கலாம் போல கிடக்குது என்ன பாருங்கோ?
ஆங்கிலத்தில யோசிச்சு தமிழில கதைக்கிற அந்தப் பெரிய சட்டத்தரணிய சில பேருக்கு மதிக்கத் தெரியேல்ல எண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புறுபுறுத்தவையாம் எண்டும் கேள்வி பாருங்கோ ?
நன்றி: சரிதம்
Geen opmerkingen:
Een reactie posten