ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற “சிறிலங்காவின் மனிதஉரிமைகள்“ என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வருவது குறித்து நாம் அறிவோம். அதற்கு நாம் ஆதரவு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன“ என்றும் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten