தாய்லாந்தில் அகதியாக தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த தேவானந்தன் தேவகுமார் UNHCR அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்றதையடுத்து, காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக UNHCR அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, தேவானந்தன் தேவகுமார் லங்காசிறி வானொலிக்கு தனக்கு நடந்த சம்பவத்தினை தெரியப்படுத்தியிருந்தார்.
மேலும், அவர் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மைச் சம்பவத்தினை மறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது குறிதது தெரிவிக்கையில்,
நான் மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்தவன் யுத்தம் காரணமாக, 2007.11. 20 ஆம் திகதி தாய்லாந்திற்கு நானும் எனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் வந்திருந்தேன்.
விடுதலைப்புலி அங்கத்தவத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் ஆரம்பத்தில் தாய்லாந்து அகதி அந்தஸ்து தர மறுத்திருந்தது. அதன் பின்பு யுத்தத்தினால் எனது மனநிலை குழம்பியிருந்ததன் காரணமாக அகதி அந்தஸ்து கொடுத்தார்கள்.
பின்னர் என்னுடைய அகதி அந்தந்து கோரிக்கை தொடர்பாக UNHCR அமெரிக்காவுக்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்திருந்தனர். நான் அவர்களிடம் அமெரிக்காவுக்கு தஞ்சம் வேண்டுமென கோரிக்கை விடுக்கவில்லை. இருப்பினும் என்னுடைய தஞ்சம் கோரிக்கையை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்ததினை காரணம் காட்டி அமெரிக்கா நிராகரித்து விட்டது.
என்னுடைய பிள்ளைகளின் கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வேறு ஒரு நாட்டில் புகலிடம் வழங்குமாறு UNHCR இடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனக்கு நியூசிலாந்திற்கு புகலிடம் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில், ஆரம்பத்தில் நான் மனநிலை சரியில்லாமல் இருந்ததை மீண்டும் காரணம் காட்டி UNHCR நியூலாந்திற்கு செல்வதனையும் தடுத்து விட்டார்கள்.
இந்த சம்பவங்களையடுத்தே நான் இந்த முடிவுக்கு வந்தேன்.
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்த இருந்த நிலையில் நான் தீக்குளிக்க முயற்சிக்க வில்லை. தாய்லாந்தில் என்னை அகதியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
எனது 4 பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது நாட்டில் தங்சம் கோரியே நான் இவ்வாறான நடடிவடிக்கையில் ஈடுபட்டேன்.
நான் UNHCR அதிகாரிகளிடம் நீதி தான் கேட்டேன். அதற்குரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க மறுத் விட்டார்கள்.
UNHCR அதிகாரிகளை மிரட்டவில்லை! எச்சரிக்கை விடுக்கவில்லை. எனக்கு நீதி வழங்கமாறு பல தடவைகள் கோரியும் அதற்கான நடவடிக்கை எடுக்க வில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten