தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 februari 2012

யுத்தத்தின் பின்னரும் இரண்டு நாடுகள் உருவாகியுள்ளதாக கூறுகிறார் அமைச்சர் வாசுதேவ!!


இந்த நாடு இரண்டாகப் பிளவுபடுவதை தடுப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னரும் இரண்டு நாடுகள் உருவாகியுள்ளதாக கூறினார்.
அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர்  தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த நாடு இரண்டாகப் பிளவுபடுவதை தடுப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னரும் இரண்டு நாடுகள் உருவாகியுள்ளதாக கூறினார்.
வட பகுதியில் ஒரு விதமான நிர்வாகம் இடம்பெறுவதாகவும், வடக்கில் ஜனநாயக ரீதியில் தெரிவான பிரதிநிதிகள் நிருவாகம் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கிழக்கிலும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை இயங்கும் நிலையில், அங்கும் உரிய முறையில் நிருவாகத்தை முன்னெடுக்க முடியாதுள்ளதென தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கமே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் அதற்கு அரசாங்கம் தடையாகவும் உள்ளது எனக் கூறினார்.
இராணுவத்தினர் அழுத்தங்களில் இருந்து மீண்டு மக்கள் சுதந்திரமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் பரிந்துரைகளி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கையானது நாட்டு மக்களின் மனசாட்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் தேசிய மொழிகள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten