இறுதி யுத்தத்தில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பான பன்னாட்டு விசாரணைகள் அனாவசியமானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாரம் பி.பி.சி சிங்கள சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் எம்.ஏ.சுமந்திரன், சிறீலங்காவின் நல்லிணக்க ஆணையத்தின் முன்மொழிவுகள் உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாக அமுல்படுத்தப்படுவதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான உள்நாட்டுப் பொறிமுறைகள் தோல்வியடையும் பட்சத்திலேயே பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளுக்கான தேவைகள் எழும் என்றும், ஆனாலும் தற்பொழுது அதற்கான தேவைகள் எழுந்திருப்பதாகத் தான் கருதவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகள் எவையும் இன்றி இரா.சம்பந்தன் அவர்களுடனான தனிப்பட்ட உறவு வாயிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சுவீகரித்துக் கொண்ட எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் இத்தான்தோன்றித்தனமான கருத்தை தமிழீழ தாயகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நிராகரிக்க வேண்டும்.

Geen opmerkingen:
Een reactie posten