போரில் வெற்றியீட்டிக் கொடுத்த காரணத்திற்காக படையினரின் அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என திவயின ஆசிரியர் தலைங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சிலாபத்தில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது படையினர் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது.
போர் வெற்றியினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை.
கலகம் ஏற்படுத்தியவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலில் ஒருவரது தலையில் துளை ஏற்பட்டு மரணம் சம்பவிக்காது.
சிலாபம் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்த மீனவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்தார்.
கண்ணீர்ப் புகைக் குண்டு துப்பாக்கி ரவையாக மாறியதா?
எரிபொருள் விலையேற்றத்தினால் ஏற்பட்ட பாரிய பிரச்சினைகள் பற்றி வெளிப்படுத்தும் நோக்கில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு மீனவரும் துப்பாக்கி ஏந்தி போராட்டம் நடத்தவில்லை.
கோஷங்களை எழுப்புவதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படப் போவதில்லை என்பதனைக் கூட நேற்று கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மாடுகளுக்கு தெரியவில்லை.
ஜனநாயக நாடொன்றில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடுபவர்கள்; மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ஆரோக்கியமான விடயமல்ல.
இவ்வாறான நடவடிக்கைகளே சர்வதேச அரங்கில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்ட வாய்ப்பாக அமைகின்றது.
எரிபொருள் விலையை குறைக்க முடியும் என்பதனை ஐ.தே.க ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது.
இந்தநிலையில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுவதனை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்.
பாதுகாப்புத் தரப்பினர் போரின் போது ஆற்றிய சேவையை ஒருபோதும் குறைவாக மதிப்பீடு செய்யவில்லை.
எனினும், அநிநாயமாக படுகொலைகளை செய்யும் சம்பவங்களை போர் வெற்றிக்காக பொறுத்துக் கொள்ளவும் தேவையில்லை என திவயின பத்திரிகையின் நீண்ட ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten