இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தமிழ்நாட்டில் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றது.

அமெரிக்காவின் இந்த  ஆய்வு நடவடிக்கையால் இலங்கை அரசு கடும் விசனம் அடைந்து உள்ளது.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த வரலாறு, அதன் பின்னணி, தமிழகத்திலுள்ள தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்புகள், இந்தியாவிலிருந்து இப்போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்த விடயங்கள் அமெரிக்க தூதரகத்தின் ஆய்வில் விலாவாரியாக  இடம்பெற உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரிடமும் அமெரிக்கத் தூதரகம் விபரங்களைக் கோரி இருக்கிறது.

ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் மாநாடு அடுத்த மாதம் ஆரம்பம் ஆகின்ற நிலையில்  அமெரிக்கத் தூதரகம் இவ்வாறான ஆய்வை மேற்கொண்டு வருவது இலங்கை அரசை பீதிக்கு உள்ளாக்கி உள்ளது.

இலங்கைப் பிரச்சினை குறித்தான முக்கியமான தகவல்கள் பலவற்றையும் தமிழ்நாட்டிலுள்ள பல தமிழ் அமைப்புகள் அங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்து உள்ளன.