தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 februari 2012

காதலர் தினத்தில் காதலனை அடித்துக் கொன்ற காதலியின் பெற்றோர்!!


உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடும் வேளையில் இளம் காதலன், தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து இவனது உயிரை பறித்த சம்பவம் காதலர் தினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14 ம் நூற்றாண்டில் வேலன்டைன் பாதிரியார், காதலித்தவர்களை திருமணம் செய்து வைக்க தன் உயிரை இழந்தார் என்பதும், இவரது நினைவாக காதலர் தினம் வருடந்தோறும் பெப்ரவரி-14ம் திகதி கொண்டாடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள காதலர்கள் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மூலம் காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் காதலர்களுக்கு கவலை தரும் ஒரு கொலை நாட்டின் இந்திய மாநிலமான உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
காதலியை சந்திக்க சென்ற காதலன்:
உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகர் அருகே கேத்வான் நகரை சேர்ந்த ரசீத்(வயது 15). இவர் அருகில் உள்ள சர்தானா பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். இந்த விடயம் காற்றில் பரவிய காகிதம் போல பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் மாணவி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.
காதலர் தினமான இன்று காதலியை சந்தித்தே தீர வேண்டும் என்று ரசீத்துக்கு எண்ணம் ஏற்பட்டு, எப்படியாவது அவளது வீட்டுக்கு சென்று பார்த்து பேசி விடவேண்டும் என்ற வீரத்துடன் நாயகன் ரசீத் சென்றுள்ளார்.
அங்கு அவளை சந்தித்து, இருவரும் சில நிமிடங்கள் பேசியுள்ளனர். இதற்கிடையில் இவர்களது சந்திப்பு மாணவியின் உறவினர்களுக்கு தெரிந்ததும் சந்தித்த இடத்திற்கு வந்தனர். காதலன் ரஷீதை பிடித்து, அடித்து துவைத்து எடுத்தனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் ரஷீத் ரோட்டில் கிடந்தான்.
மேலும் மாணவிக்கும் அடி, உதை விழுந்தது. தகவல் அறிந்த ரசீத்தின் பெற்றோர்கள் அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. காதலர் தினமான இந்நாளில் ஒரு கொலை நடந்திருப்பது காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Geen opmerkingen:

Een reactie posten