மூன்று தசாப்த்தங்களாக இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் அவர்கள் நிம்மதியாக வாழ அவர்களுக்கு அதிகாரங்களும் சுதந்திரமும் வேண்டும் என லூயில் ஹர்பர் அவர்கள் தெரிவித்துள்ளார். த குளோப் அன் மெயில் என்னும் கனேடிய ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கும் லூயில் ஹர்பர் அவர்கள் தெரிவித்துள்ள இக் கருத்துகள் இலங்கை அரசை அதிருப்த்தியடையவைத்துள்ளது. இருப்பினும் இவர் கருத்துத் தொடர்பாக இலங்கை அரசு எந்த எதிர்கூற்றையும் வெளியிடவில்லை.
வட கிழக்கில் உள்ள சுமார் 10,000 விதவைகளில் சிலர் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர்களின் குழந்தைகள் நாட்டை விட்டுக் கடத்தப்படுவதாகவும், அவர்கள் வெளிநாடுகளுக்கு விற்க்கப்படுவதாக தாம் அறிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் குறைந்த பட்சத்தில் காணப்படுவதாக அமெரிக்க சமீபத்தில் தெரிவித்த கருத்தை அவர் அடியோடு மறுத்துள்ளார்.
மகிந்தரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தெரிவிக்கும் மற்றும் பரிந்துரைத்துள்ள விடையங்கள் வெறும் அறிக்கையாக மட்டும் இருக்காமல் அவற்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு முயலவேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten