தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 februari 2012

தளபதி பிரிகேடியர் சொர்ணம்!!


இன்று தளபதி பிரிகேடியர் சொர்ணத்தின் அணியில் இருந்த ஒரு போராளியுடன் உரையாடினேன். சொர்ணம் அவர்கள் "தலைவர்தான் போராட்டம். தலைவர்தான் எல்லாம். தலைவரை நாம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும" என்று தமக்கு தொடர்ந்து கட்டளை இட்டபடியே இருந்ததாக குறிப்பிட்டார் அந்த போராளி. குறைந்த வளங்களுடன் ஓய்வின்றி பல ஊடறுப்பு சமர்களை தொடர்ந்து நடத்தியபபடி எதிரியை நிலைகுலைப்பதிலேயே குறியாக இருந்தாராம். எல்லா சமர்களிலும் சிறிதும் பெரிதுமாக நிறைய விழுப்புண்கள் அவருக்கு ஏற்பட்டதாகவும் அதையும் கவனியாமல் தமக்கு மே மாத நடுப்பகுதிவரை கட்டளை வழங்கியபடியே இருந்தாராம். இறுதியாக முழுவதுமாக உடல் செயல் இழந்த நிலையில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்திருக்கிறார். அந்த போராளி சொன்ன கதைகள் பல தற்போது இங்கு பதிவிட முடியாதவை. அர்ப்பணிப்பும் தியாகவும் வீரமும் அந்த நிலத்தில் வைத்து நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. இவை வரலாற்றில் எழுதப்பட வேண்டும். (இந்த படம் ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இது அவரது கடைசி ஊடறுப்புக்கு முன்பாக எடுக்கப்பட்டதாக அந்த போராளி குறிப்பிட்டார்)

Geen opmerkingen:

Een reactie posten