தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தின் திறமையை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினர் மிகவும் நயந்து இருக்கின்றனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான இராஜதந்திரி உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழு ஒன்று 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ஒன்று மேற்கொண்டு இருந்தது.
இக்குழுவினருக்கு அரசியல் தலைமைப் பணிமனையில் வைத்து இரு மணித்தியாலங்கள் வரை புலிகளால் விளக்கம் கொடுக்கப்பட்டது.
விளக்கத்தை பாலசிங்கம் ஆரம்பித்து வைத்தார். 40 நிமிடங்கள் தொடர்ந்து பேசி இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் இச்சந்திப்பு குறித்து அவ்வருடம் மார் 15 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு இராஜதந்திர மடல் ஒன்று அனுப்ப்பபட்டது.
இதில் பாலசிங்கம் குறித்த விபரங்களும் சேர்க்கப்பட்டு உள்ளது.
-பாலசிங்கம் வசப்படுத்தக் கூடிய வகையில் பேசுபவர். சொல் வலிமை மிக்கவர். தெளிவாக பேசுபவர். துறை சார்ந்த நிபுணர். முழுமையான அளவில் ஆங்கிலம் தெரிந்தவர். இவரது விளக்கம் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இருந்தது. இவரது விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அறிவார்ந்ததாகவும் இருந்தது. படையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய குமரப்பா! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த குமரப்பா குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்து இருந்த தகவல்கள் மிகவும் சுவாரஷியம் ஆனவை.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து குமரன் – ஆறாம் அறிவு என்கிற உப தலைப்பில் 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு இராஜதந்திர ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.
-அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான புலித் தளபதியாக குமரப்பா உள்ளார். இவருடைய உண்மையான பெயரை அறிய முடியவில்லை. இவர் மிகவும் கை தேர்ந்த போர்த் தந்திரசாலி. வழங்கப்பட்டு இருந்த படையணியை வைத்துக் கொண்டு அற்புதமான கொரில்லாத் தாக்குதல்களை மேற்கொண்டு இருக்கின்றார்.
இவரது தாய் மட்டக்களப்பு தமிழர். தகப்பன் யாழ்ப்பாண தமிழர். எனவே இவர் யாழ்ப்பாணத்துக்கும், மட்டக்களப்புக்கும் உரித்தான போராளியாக இயக்கத்தில் பார்க்கப்படுகின்றார். ஏராளமான சந்தர்ப்பங்களில் இவர் மரணத்தில் இருந்தும் கைது செய்யப்படுகின்றமையில் இருந்தும் மயிரிழையில் தப்பி இருக்கின்றார்.
குமரப்பாவை கொல்கின்றமைக்கு மேற்கொள்ளப்பட்ட இரகசிய திட்டம் ஒன்று தோல்வி அடைந்தமையை இலங்கை படையின் சிரேஷ்ட தளபதி ஒருவர் தூதரகத்துக்கு சொல்லி இருக்கின்றார்.
மட்டக்களப்புக்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்றிடம் இருந்து கப்பம் பெற குமரப்பா நேரில் வருகின்றார் என்று படையினருக்கு தகவல் கிடைத்து இருந்தது. படையினருடன் ஒத்துழைத்தது அக்குடும்பம். அக்குடும்பத்தின் வீட்டுக்கு அருகில் வீதியில் படையினர் பதுங்கி இருந்தனர்.
குமரனும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஆனால் வெளிப்படைக் காரணிகள் எதுவும் இல்லாமலேயே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார் குமரன். வீதியை சுற்றுமுற்றும் பார்த்தார். வந்த வழியிலேயே திரும்பிப் போய் விட்டார்.
படையினர் பதுங்கி இருந்தமையை எவ்வாறு குமரப்பா கண்டுபிடித்தார்? என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது, குமரப்பாவுக்கு ஆறாவது அறிவு இருந்திருக்க வேண்டும் என்று மேற்சொன்ன தளபதி குறிப்பிட்டு இருந்தார்.
புலிகளின் மட்டக்களப்பு முகாம் ஒன்றின் மீது 87 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றிலும் இவர் மயிரிழையில் தப்பிக் கொண்டார். இவரது வாகனத்தை மாத்திரம் (பிக்கப் வாகனத்தை) சுற்றிவளைப்பில் கைப்பற்ற படையினரால் முடிந்து உள்ளது.- |
Geen opmerkingen:
Een reactie posten