தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 oktober 2012

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக 46 அறிக்கைகள் !


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக 46 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவை இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கைகள் என்ற போர்வையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 17 அறிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் அனுப்பி வைத்துள்ளன.
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை, அரச சார்பற்ற நிறுவனங்கள் எந்த இடத்திற்கும் சுதந்திரமாக செல்ல முடியாமை, விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை விடுதலை செய்யாமை, அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தாமை தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten