யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில், முன்னாள் பெண் போராளிகள், பொங்குதமிழ் பெண் மாணவர் படையினர் மற்றும் விடுதலை புலிகள் ஆதரவு பெண்கள் ஆகிய பல பெண்கள் இராணுவத்தின் பாலியல் வல்லுறவுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினராலும், இராணுவ ஒட்டுகுழுக்களாலும் விசாரணை என்னும் பெயரில் பாலியல், கற்பழிப்பு, கலப்பு திருமணம் போண்ற அனாகரீகமான செயல்கள் அதிகரித்து வருகின்றது. பல செயல்கள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகின்றது, சிலது மௌனித்து போகின்றது.
ஒரு முன்னாள் மாணவர் படைப் பயிற்சி முடித்த பெண்களின் புகைப்படங்கள் இலங்கை அரச இணையத்தளம் ஒன்றில் 2009ம் ஆண்டு போரின் முடிவில் முடிவில் பிரசுரிக்கப்பட்டது. அதன் விளைவாக அண்மையில் ஒரு உயிரை பறித்திருக்கின்றது அத்துடன் பல..
2009 ஆண்டின் பின்பு பல முன்னாள் மாணவர் படை உறுப்பினர்களினது தகவல்களுடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் வன்னி, யாழ் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தேராவில் பகுதியில் உள்ள முன்னாள் பெண்கள் மாணவர் படையில் பயிற்சி பெற்ற ஒரு பாடசாலை மாணவி, இராணுவ புலனாய்வுத்துறையினால் விசாரணை என்று கைது செய்யப்பட்டு 4 நாட்கள் இராணுவத்தினரதும், புலனாய்வு பிரிவினதும் இரக்கமற்ற பாலியல் கொடுமைகளின் பின்பு விடுதலை செய்யபட்டுள்ளார். தாமினி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்னும் இந்த பெண் கடந்த 14.08.2012 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தற்கொலையின் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. இரண்டு இராணுவ சிப்பாயும் ஒருபுலனாய்வு பிரிவினரும் பல தடைவகள் இந்த தாமினி என்ற அழகிய தமிழ் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை என்றும் அவரும், அவரின் குடும்பமும் மிகவும் பயமுறுத்தப் பட்டுள்ளனர்.
தாமினியின் குடும்பம் சாதாரண கூலி வேலை செய்து தினமும் தமது குடும்ப வாழ்க்கை நடத்தி தமது மகளின் படிப்பே தமது எதிகாலத்தை திசை திருப்பும் என்று நினைத்திருந்தனர்.
அனால் இந்த படிப்பறிவற்ற பாமர குடும்பத்தினரும் இராணுவத்தால் எச்சரிக்க பட்டதால் எந்த மனித உரிமைகள் அமைப்பையோ அல்லது யாரையும் அணுகவில்லை. பல தடைவகள் இந்த பெண் பாலியல் தொல்லைகளுக்கும் உட்படுத்தப்பட்ட இந்த பெண்ணிற்கு, இராணுவ சிப்பாய் ஒருவரை திருமணம் செய்யும் சந்தர்ப்பத்தில் பல விதமான இன்னல்களில் இருந்து தப்பமுடியும் எனவும் இல்லையேல் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த காரணம் காட்டி 5 வருட சிறை செல்ல வேண்டி நிர்பந்தம் ஏற்படும் என்றும் அச்சுறுத்த பட்ட நிலையில், தங்களுடன் ஒத்துழைக்கும் பட்சத்தில் உனது உயிருக்கும், குடும்பத்தினருதும் உயிருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வெளி உலகேம அறியாத இந்த குடும்பம் தங்கள் உறவுக்காறரான ஆட்டோ சாரதியான பொன்னுத்துரை என்பவர் மூலம் இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் தாமினியை தொல்லை செய்ய வேண்டாம் என்று கேட்ட காரணத்தினால், நடு இரவு நேரம் ஆட்டோவில் புதுக்குடியிருப்பு போக வேண்டும் என்று கேட்டு இரு முகம் தெரியாத நபர்கள் இடைவெளியில் வள்ளிபுனம் பகுதியில் வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர்,
அதிலிருந்து அதிஷ்டசவசமாக உயிர் தப்பிய பொன்னுத்துரை கழுத்தினில் 14 இளையுடன் அதிஷ்டசவசமாக உயிர் தப்பியதுடன் அவரினது ஆட்டோவும் பறித்து செல்லப்பட்டது.
பல தடவைகள் இராணுவத்தினரது பாலியல் வன்முறையினால் கர்ப்பம் தரிக்கப்பட்ட தாமினி, தனது வயிற்றில் சிங்கள வெறியரின் குழந்தையை சுமக்க முடியாமலும், இராணுவத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல் இரண்டு தனது 2 சகோதரர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தற்கொலை ஒன்றே முடிவு என நினைத்து,
கிருமிநாசினி உண்டு தற்கொலை செய்துள்ளார். இத் தற்கொலை குடும்ப வறுமை என்று பலராலும் அறியப்பட்டாலும் உண்மை இதுவாகவே இருக்கின்றது.
புகைப்படத்தில் உள்ள மற்றுமொரு பெண், ஒரு வருடத்திற்கு முன்பாக வடமராட்சி கிழக்கினில் வத்திராயன். முன்னாள் மாணவர் பயிற்சி பெற்ற பெண்ணிற்கும் தாமினிக்கு நடந்தது போன்ற இராணுவத்தினரது, புலனாய்வு பிரிவினதும் கொடுமையிலிருந்து தப்பி நாட்டினை விட்டு தப்பி ஓடியதாகவும், இவரது தந்தை விடுதலைப்புலிகளின் அமைப்பின் தொண்டராக பணியாற்றினார் என்றும் மகன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற காரணத்தாலும் இராணுவத்தினால் சுட்டு கொல்லப்பட்டதாக அறியப்படுகின்றது.
அதன் பின்பு புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தலின் காரணமாக சகோதரர்களும் சொந்த இடத்தினை விட்டு வேறு இடத்திற்கு உறவினர்களுடன் சென்றுவிட்டதாக அறியப்படுகின்றது.
இராணுவத்தின் புலனாய்வு பிரிவினது காரணமான இந்த பெண் தற்போது உயிருடன் இருப்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக அறியப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 22 வயது நிரம்பிய பள்ளி மானவி ஒருவர் தனதும், தங்களினதும் குடும்பத்தினதும் எதிர்காலம் கருதி ஒரு சிங்கள இராணுவ புலனாய்வு அதிகாரியை திருமணம் செய்து தற்பொழுது ஹம்பகா மாவட்டத்தில் வசித்து வருகின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் கலப்பு திருமணம், முன்னாள் போராளிகைள, பொங்குதமிழ் நடத்தியோர், ஆயுதப் பயிற்சி எடுத்த முன்னாள் மாணவர்களை பழிவாங்குவது போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றது எமது மண்ணில். இதுபோன்ற செயல்களுக்கு சில தமிழ் இளையோரும் இராணுவத்துடன் சேர்ந்து உடந்தையாக இருப்பது மனேவதனை அழிக்கின்றது.
Geen opmerkingen:
Een reactie posten