முஸ்லிம்கள் மீது கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 37) –நிராஜ் டேவிட்!
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடைகள் இவை. இந்தியப் படையினர் இந்தக் கடைகளில்தான் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வது வழக்கம். அருகில் உள்ள குளிர்பானக் கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு, ரியோ இலக்ரிகல்சில் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வார்கள்.
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-24
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-25
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-26
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-27
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-28
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-29
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-30
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-31
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-32
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-33
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-34
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-35
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-36
http://news.lankasri.com/show-RUmqzATYObeo6.html
அன்றைய தினம் ரியோ கூல்பாரில் குளிர்பானம் அருந்திவிட்டு அருகில் இருந்த மின்சார உபகரணக் கடைக்கு சில இந்தியப் படையினர் சென்றார்கள். கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த முதலாளிக்கு மகிழ்ச்சி. கடையின் உள்ளே இருந்த தனது உதவியாளரிடம் வருபவர்களை நன்றாகக் கவனிக்கும்படி உரிமையாளர் தெரிவித்தார். தனது கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களைக் குறிப்பிட்டு தனது உதவியாளனிடம் ``மச்சான்கள் வாறாங்கள் உள்ளே கூட்டிக்கொண்டு போய் கவனி`` என்று தெரிவித்தார்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சாதாரணமாக ``மச்சான்’’ என்கின்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பார்கள். அதிகம் நட்புரிமை பாராட்டுகின்ற நபர்களை அவர்கள் ’’மச்சான்’’ என்கின்ற வார்த்தையை உபயோகித்துத்தான் அழைப்பார்கள்.
கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களுள் ஒரு தமிழ் நாட்டுப் படைவீரரும் வந்திருந்தார். கடை உரிமையாளர் ``மச்சான்’’ என்று தம்மை அழைத்தது அந்த இந்திய வீரருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. கடை உரிமையாளரை சட்டையைப் பிடித்து வெளியில் இழுத்து வந்து தெருவில் போட்டார். நல்ல அடி, உதை கிடைத்தது. கூட வந்த ஹிந்தி ஜவான்களுக்கு என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. ஆனால் அவர்களும் தம்பங்கிற்கு அந்த கடை உரிமையாளரைப் போட்டு மிதித்தார்கள்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் எம்.சீ.எம் இஸ்மைல் அன் சன்ஸ், மொட் சென்டர் என்று நிறைய முஸ்லிம் கடைகள் காணப்பட்டன. தெருவிலும் நிறைய பேர் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நிறையப் பேர் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். எதற்கு அந்த வயோதிப நபரைப் போட்டு அடிக்கின்றாhகள் என்று எவருக்குமே புரியவில்லை. கேட்கவும் தைரியம் இல்லை.
கடைசியில் அந்த இந்தியப் படை வீரரே சுற்றிநின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு விளக்கினார்.
‘’என்னை இவன் மச்சான் என்று அழைத்தான். இவனுக்கு நான் எப்படி மச்சான் ஆக முடியும்? இவன் ஒரு முஸ்லிம். பாக்கிஸ்தானி. நானோ இந்து. என்னை மச்சான் என்று அழைத்ததன் மூலம் எனது தங்கையை இவன் பெண்டாளக் கேட்கிறான். இது சரியா??’’ என்று கேட்டார். சுற்றி நின்றவர்களுக்கோ திகைப்பு. வேறு வழியில்லாமல் அங்கு திரண்டு நின்ற முஸ்லிம்களும், ’’அவர் மச்சான் என்று அழைத்தது பிழைதான்’’ என்று தெரிவிக்கவேண்டி இருந்தது.
முஸ்லிம்கள் இந்தியப் படை ஜவான்களால் எதற்கெல்லாம் தாக்கப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான். இதுபோன்ற, இதனையும்விட மோசமான நிறையச் சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன.
முஸ்லிம்கள் சாதாரணமாக அணியும், அவர்களது மார்க்க தனித்துவ அடையாளமான தொப்பிகளை அணிந்து செல்லும் முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு ’’பாக்கிஸ்தானி??’’ என்று கேட்டுக் கேட்டுத் தாக்கப்பட்டார்கள்.
பஸ்வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இந்தியப்படையினரின் சோதனைச் சாவடிகளில் இறங்காது விட்டால் போதும். அவர் இறக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். பயணங்களின் போது முஸ்லிம் பெண்கள் ’பர்தா’ அணிவதைத் தவிர்க்கும் ஒரு சூழ்நிலை கூட இந்தியப்படையின் காலங்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உருவாகி இருந்தது. முஸ்லிம் பெண்கள் என்று இந்தியப் படையினர் அடையாளம் கண்டு கொண்டால் பாலியல் சேஷ்டைகள் அதிகம் இடம்பெறும். இந்தியப் படையினருடன் கூட இருந்த தமிழ் இயக்க உறுப்பினர்களும் இதில் சற்று மோசமாகவே நடந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் முஸ்லிம்கள்:இந்தியப் படையினரின் இதுபோன்ற துன்புறுத்தல்களின் பலனாக நிறைய முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். பொறுப்பாளர்கள் தரத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் செயற்படும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு அக்காலகட்டத்தில் காணப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத் தளபதிகளான கரிகாலன், விசு போன்றவர்களின் மெய்ப்பாதுகாவலர்களாக முஸ்லிம் போராளிகளே இருக்கும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்கள் இந்தியப் படையினருக்கு எதிரான போராட்டங்களில் முனைப்பு வெளிப்படுத்தியிருந்தார்கள்.
விளைவு: பல முஸ்லிம் கிரமங்கள் இந்தியப் படையினருதும், இந்தியக் கைக்கூலிகளினுடையதும் தாக்குதல்களுக்கு உள்ளாகவேண்டிய துர்பாக்கிய நிலை உருவானது.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்கள் இந்தியப் படையின் தாக்குதல் கொடுமைகளுக்கு உள்ளாயின.
தாக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள்:
முஸ்லிம்கள் மீதான இந்தியப் படையினரின் தாக்குதல்களுக்கு முத்தாய்ப்பாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
முஸ்லிம்கள் மீதான இந்தியப் படையினரின் தாக்குதல்களுக்கு முத்தாய்ப்பாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
இந்திய றோவினால் வழிநடத்தப்பட்ட திறீ ஸ்டார் அமைப்புடன் இணைந்து சென்ற இந்தியப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் சாந்தமருது மற்றும் மாளிகைக்காடு முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
1988ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்த கிராமங்களுக்கு இந்தியப் படையினர் வாகனங்களில் வந்திறங்கி சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 16 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 67 வீடுகள் சூறையாடப்பட்டு சேதமாக்கப்பட்டன. 65 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டதாக கணிப்பிடப்பட்டது. பல முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளானார்கள். இரண்டு வயதுக் குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள்வரை இந்தியப் படையினரால் கொல்லப்பட்டிருந்தார்கள். விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இந்தக் கிராமத்து மக்கள் தஞ்சம் அளித்தார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு.
இந்தக் கிராமங்கள் முழுக்கமுழுக்க முஸ்லிம் கிராமங்கள் என்பதும் இந்தக் கிராமங்கள் மீது இந்தியப் படையினர் தாக்குதல் மேற்கொள்ளுவதற்கான இரண்டாவது காரணம். இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்களில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
``அது நாங்கள் அல்ல..``
முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்துவது பற்றி பல கண்டனங்கள் எழுந்தன.
முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்துவது பற்றி பல கண்டனங்கள் எழுந்தன.
இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் மூலமாக இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட ஆரம்பித்தன. களத்தில் இருந்த இந்தியப் படையினர் இலகுவாகவே பொறுப்பை திறிஸ்டார் அமைப்பின் மீது சுமத்தியிருந்தார்கள்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து 1988 ஏப்ரல் மாதம் இந்தியப்படைத் தளபதிகளுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியப் படையின் அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கிருஷ்ணசுவாமி லோகநாதன் அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் ``இந்திய-இலங்கை ஒப்பத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கமறுத்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை முற்றாகவே அழிக்கும்படியான உத்தரவு இந்தியப் படையினருக்கு கிடைக்கப்பெற்றது. அதனால் புலிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் அரவணைக்கவேண்டிய ஒரு தேவை எங்களுக்கு உருவானது. திறிஸ்டார் என்ற அமைப்பும் அந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திறிஸ்டார் உறுப்பினர்கள் தங்களுடைய ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு எதிராக இப்படித் திருப்புவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.
அதாவது தமக்கெதிராக எழுப்பப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மிகவும் இலகுவாக தமிழ் இயக்கங்கள் மீது அவர் திருப்பிவிட்டிருந்தார்.
வரப்பிந்திய படையினர்:இதில் ஒரு விடயம் முக்கிமானது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இந்தியப் படையின் முகாம்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் கிராமங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சுமார் ஒன்று முதல் மூன்று மணி நேரம்வரை நீடித்தன. ஆனால் ஒவ்வொரு தடவையும் தாக்குதல் நடைபெற்று முடிந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர்தான் இந்தியப் படையினர் ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தார்கள்(தமிழ் சினிமாக்களில் இந்தியப் பொலிசார் வருவதைப் போன்று).
இந்தியப் படையினரே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமாணவர்கள் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு இவைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
அவலங்கள் தொடரும்…
nirajdavid@bluewin.ch
nirajdavid@bluewin.ch
Geen opmerkingen:
Een reactie posten