தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 oktober 2013

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-10


“இந்தியா பெற்றுக் கொடுக்கும் தீர்வில், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, நீங்களே மாநில அரசை நடத்தும் அதிகாரம் கிடைக்கிறதே”
“அது எங்களுக்கு தேவையில்லை. எமது தலைவரால் அதைவிட பெரிதான ஒன்றை பெற்றுக் கொடுக்கும் வல்லமை உள்ளது”
“இதைவிட பெரிய தீர்வா? அது என்ன”
“தனி ஈழம். எமது மண்ணை நாங்களே ஆட்சி செய்யும் தனிநாடு”
விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இப்படிக் கூறியதும் தூதரக அதிகாரி பூரி சிறிது நேரம் பேச்சு வராமல் நின்றிருந்தார். இதற்குமேல் எதைக் கூறி புலிகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்கச் செய்ய முடியும் என்பதை அவரால் ஊகிக்க முடியாது இருந்திருக்கலாம்.
“இதுதான் உங்கள் முடிவு என்றால், அதை எனது மேலதிகாரியிடம் கூறுகின்றேன். நான் ஒரு அதிகாரிதான். எனது மேலதிகாரியும், ஆட்சியில் இருப்பவர்களும் என்ன செய்வது என்று முடிவு எடுப்பார்கள்” என்றார் பூரி.
அந்த அறையில் இருந்து வெளியேற முயன்ற அவர், ஒரு கணம் தயங்கியபின் திரும்பி கேட்டார்: “இப்போது உங்களுக்கு (இலங்கை தமிழர்களுக்கு) இலங்கையில் எந்த அதிகாரமும் கிடையாது. நாங்கள் இரு மாகாணங்களை ஒன்றிணைந்து, மாகாண அரசு ஒன்றை உருவாக்கி, அதன் அதிகாரத்தை தருவதாக கூறுகிறோம். ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்கிறீர்கள். உங்கள் மக்களுக்கு கிடைக்கவுள்ள இந்த அதிகாரத்தை, அவர்களது பிரதிநிதிகள் என்று கூறி மறுக்கிறீர்கள்.
நாளைக்கே வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட மாகாணசபை அதிகாரமும் இல்லாமல், உங்களால் தனி ஈழமும் பெற்றுக் கொடுக்க முடியாமலும் போனால், உங்கள் மக்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள்?”
இதற்கு பிரபாகரன் தமிழில் கூறிய பதிலை, ஆன்டன் பாலசிங்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்”
இதற்குமேல் எதுவும் பேசாமல், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் பூரி.
இந்த தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி, நடக்கப் போவதை ஊகித்து கேட்டாரா, உள்ளுணர்வில் கேட்டாரா, அல்லது அந்த நேரத்தில் மனதில் எழுந்த கேள்வியை கேட்டாரா என்பது தெரியாது.
ஆனால், அவரது சந்தேகமே பலித்தது.
இந்தியாவால் உருவாக்கி கொடுக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண அரசை, விடுதலை புலிகளே கலைக்க வைத்தார்கள். அதைவிட உன்னதமான ஈழத்தை பெற்றுத் தருவதாக கூறி, யுத்தத்தை தொடர்ந்தார்கள். யுத்தம் முடிந்தது.
“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிய பிரபாகரனின் தற்போதைய இருப்பிடம், நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியவர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளது.
“வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண அரசை டில்லியின் வற்புறுத்தல் காரணமாக கொடுத்தோம். இனி அதெல்லாம் கொடுக்க இயலாது” என்று கூறிவிட்டது இலங்கை அரசு. இந்தியாவால் அதிக நெருக்கடி கொடுக்க முடியாதபடி, சீனாவை அழைத்து வந்து வீட்டு வாயிலில் நிறுத்தியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஷே.
இந்த மாப்பிள்ளை முறைந்தால், அந்த மாப்பிள்ளை உள்ளே வருவார்!
தனி ஈழத்தின் கதி?
அமெரிக்காவில் வசிக்கும் உருத்திர குமாரன், பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். எந்த நாட்டில் என்று கூறவில்லை.
நாடு கடந்த தமிழீழ அமைச்சரவை எல்லாம் அமைத்து, தாமே பிரதமராகவும் உள்ளார். அமைச்சர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும், கனடாவிலும் வசிக்கின்றனர். ஈழ பிரதமர் இலங்கை செல்வதை விடுங்கள், அமைச்சர்களை சந்திக்க ஐரோப்பா செல்வதற்கே, முடியாது. அவரிடம் இருப்பது இலங்கை பாஸ்போர்ட்தான்.
இதனால், அமைச்சரவை Skype-ல் கூடுகிறது. விளையாட்டுத் துறைக்கு கூட ஒரு அமைச்சர் உள்ளார். நல்ல விளையாட்டுதான்….. அடுத்த பக்கம் வாருங்கள்
http://viruvirupu.com/2012/09/02/25556/#ixzz2iVl0yCx2

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-10

கருணாநிதியை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். அந்த மனுஷனால் என்ன செய்திருக்க முடியும்? அவர் பிரதமராக இருந்தால்கூட யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது. காரணம், அது இந்தியாவின் யுத்தம் கிடையாது.
Viruvirupu, Sunday 02 September 2012, 11:20 GMT

பாகம் பத்து

(கடந்த 9 பாகங்களையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
கடந்த பாகத்தில் கூறப்பட்டது போல, பிரபாகரன் டில்லி வந்திறங்கிய தினத்திலேயே குழப்பம் ஆரம்பமாகி விட்டது. மறுநாள் குழப்பம் மேலும் அதிகரித்தது.
மறுநாள் காலையில் பிரபாகரனுக்கு மற்றுமோர் விஷயம் தெரியவந்தது. மற்ற இயக்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் டில்லிக்கு அழைத்து வந்து அசோகா ஹோட்டலுக்கு அருகே சாம்ராட் ஹோட்டலில் தங்கவைத்திருக்கும் விஷயம்தான் அது. அது தெரியவந்ததும், பிரபாகரன் கடும் கோபத்தில் இருந்தார்.
அதே தினத்தில் (ஜுலை 25-ம் தேதி) இந்திய அதிகாரிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரதியொன்றை முதன் முதலில் பிரபாகரனிடம் கொடுத்தார்கள். தூதரக அதிகாரி பூரி, ஒப்பந்தத்திலுள்ள ஒவ்வொரு பகுதியையும் படித்துக்காட்ட, ஆன்டன் பாலசிங்கம் அதை மொழி பெயர்த்தார்.
இது கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் நடைபெற்றது.
ஒப்பந்தம் பற்றிக் கலந்தாலோசிக்க தங்களுக்கு அவகாசம் தேவை என்று பிரபாகரன் கூறியதில், “பின்னர் வருகிறோம்” என்று கூறிவிட்டு, பூரியும் மற்றையர்களும் புலிகளை அந்த அறையில் ஆலோசனை நடத்த விட்டுவிட்டு வெளியே சென்றார்கள்.
மதிய நேரம், மீண்டும் இந்திய அதிகாரிகள் அந்த அறைக்கு வந்தார்கள்.  “ஆலோசனை செய்து என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்”
“ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது”
இதைக் கேட்டதும் பூரி திகைத்துப் போய்விட்டார்.
“ஒப்பந்தத்தில் இருப்பவை அனைத்தும் உங்களுக்குத் தெளிவாக விளக்கியிருக்கிறேன்”
“அதுதான் சொல்கிறோம். ஒப்பந்தம் விடுதலை புலிகள் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று”
“இதைவிட உன்னதமான தீர்வு ஒன்று ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கமுடியாது என்பது எங்கள் எண்ணம்”
“கிடைக்கும் என்பது விடுதலை புலிகள் இயக்கத்தின் தீர்மானமான முடிவு. நீங்கள் கொடுக்கும் தீர்வை விட உன்னதமான தீர்வு ஒன்றை எமது மக்களுக்கு எப்படி பெற்றுக் கொடுப்பது என்று எமது தலைவருக்கு தெரியும்” என்றார் பாலசிங்கம்…. அடுத்த பக்கம் வாருங்கள்

http://viruvirupu.com/2012/09/02/25554/


 

Geen opmerkingen:

Een reactie posten