தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 oktober 2013

தன்னை மறந்த சுவிஸ் தமிழ் நங்கைகள் தமிழர் தங்கைகள்!

பத்து வயது சிறுமியாய் இருக்கும் போதே நான் ஊரில் வாய் பானை என்று பெயரேடுத்தனான் என்னட்ட வாயகுடுத்து ஒருத்தரும் தப்ப ஏலாது ,நாலாவது படிக்கும் போதே பக்கத்தில இருந்த பிள்ளை குழப்படி செய்ததுக்கு டீச்சர் எனக்கும் அடிக்க ஏன் இப்ப என்னையும் அடிச்சநீங்க என்று எழுப்பிநின்று எல்லாரையும் கூட்டி நியாயம் கேட்டனான் ,வீட்ட என்ர அம்மாவும் ரீச்சர் எண்டதால வீட்ட என்னைக்கட்டி வைச்சு அடிச்சது வேற கதை ,வெளிநாடு வந்து இவா ஒரு மாதம் ஆகல ஊரில தின்னவேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் தான் அவாட அப்பா செய்தவர் அவா அந்த கடையில வெண்டிக்காயை தூக்கி கையில வைத்துக்கொண்டு இத ஊரில நாங்க என்னண்டப்பா சொல்றனாங்க என்று அவளவு சனத்துக்குள்ளேயும் வைத்து கேட்டா அவய தெரிஞ்ச எனக்கு பின்ன கோபம் வராதோ,, நானும் கேட்டு சிரித்து விட்டு வந்தா நாளைக்கு அவட புருஷன் கிரீன் கிரீனா மொழி மொழியாய் இருக்கின்ற மரக்கறி இருக்கா எண்டு முருங்கை காயை கேப்பான் ,நல்ல குடுவ குடுத்தனான் ,,சரி நான் கோபத்தில கொஞ்சம் உளறி போட்டன் இனி கதைக்கு வாறன்

நானும் தோழியும் ஒன்றாக வேலையால வீட்ட வந்து சாப்பாட்டை போட்டு தட்டில எடுத்துக்கொண்டு வந்து நான் முகப்புத்தகத்தில கங்கை மகன் புதிதாய் நிலைக்கண்ணாடி போட்டு இருக்கிறாரா என்று பார்க்க அவள் தொலைகாட்சி பெட்டிய போட்டு சுஜாதாட விதி படகட்டம் ஒன்றை அழுதழுது பார்த்தாள் ,நான் என்ர மானசீக குருவின் கதையை அவர் நகைசுவையோடு எழுதி இருந்ததால நான் சிரித்து கொண்டு பார்க்க அவளுக்கு கோபம் வந்து விட்டது உடன நிப்பாட்டி போட்டு என்னை வெளிக்கிடு கெரியா கடைக்கு போவம் இன்று சூரிச் நாதன் கடையில் மலிவு விற்பனை முதல் நாள் நல்ல சுடி சாரி எல்லாம் இருக்கும் வாங்கி வருவம் என்றாள் எனக்கு கதை முடியவில்லை பேசத்தொடங்கி விட்டாள் வேலைக்கும் நான் கலைத்து கலைத்து விடுகின்றது உனக்கு ஒரே பேஸ்புக் பாக்கிறது தான் வீட்டில வேலை வெளிக்கிடு கெரியா என்று என்னைவிட அவவுக்கு ஒரு வயது குறைவு பெரிய அம்மா மாதிரி பேசுறாள் ,சும்மா சொல்லகூடாதுங்க அவள் இல்லாட்டி என்ர பாங்கிலும் பூனை படுத்து ஊரில அம்மாட அடுப்பிலும் எப்பவோ பூனை படுத்திருக்கும் ,இப்பவே இடைக்கிடை காசில்லாத பேங்க் காட்ட மிசினுக்க விட்டு பார்கிறதால அது வேற சுடுகுது ,அவள் தான் ஒவ்வொரு நாளும் பேசி பேசி வேலைக்கு கலைக்கின்றவள்,, சரி இரண்டு பேரும் வெளிக்கிட்டு கிழ இறங்கினம்

ரயில் தரிப்பிடத்துக்கு நடந்து போகின்ரம் எங்களுக்கு முன்னால யாழ்பாணத்து ஒரு சின்ன குடும்பம் குழந்தைகள்தள்ளும்வண்டிலோடகுழந்தையை புருஷன் உருட்டிக்கொண்டு மனிசியின் கை பாக்கும் குழந்தை வண்டிலில் தான் கொழுவி இருக்கின்றது அவா சண் கிளாசும் அடித்து கொண்டு போனில யாரோடோ கதைத்து கொண்டு வந்தா ,,,,இருந்தா இப்பிடித்தான் இருக்கோணும் என்று இவள் என்ன நுள்ளி சொன்னாள் நாங்கள் எங்கள் வேலையை முடித்து கொண்டு வருவம் சும்மா அவா இவயோட தொடுத்து காவடி எடுக்காத என்றும் சொன்னாள் ரயில் வந்திச்சு நாங்கள் முதல்ல ஏறிவிட்டோம் பின்னால அவர்களும் வந்து ஏற நான் குழந்தை வண்டில உதவி செய்து மேல ஏற்றிவிட்டு குழந்தையையும் பார்த்து சொக்கில சாதுவாக ஆசையாக கிள்ளி விட்டு வந்து நாங்க ஒரு இடத்தில இருந்தோம் அவர்களும் எங்களுக்கு பக்கத்தில இருந்த இருக்கையில் வந்து இருந்தார்கள் என்ர வாயை அடைப்பதகாக தோழி போனில பாட்டு போட்டு ஒரு கேட்கின்ற இதை என்ர காதிலையும் மற்றதை அவளுடைய காதிலையும் வைத்தாள் ,,

அந்த அண்ணா பிள்ளைக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தார் அவா கேட்டார் என்ன எங்களோட கதைக்க மாட்டீங்களோ என்று தோழி சொன்னாள் அப்பிடி இல்லை அக்கா சொல்லுங்கோ நீங்க எங்க இப்ப போறீங்கள் நாங்கள் நாதன் கடைக்கு போகின்றோம் என்று சொன்னாள் ,ஆ நாங்களும் அங்கதான் போறம் அப்படியா நல்லம் நான் கேட்டன் நீங்கள் இலங்கையில் எந்த இடம் என்று அவா உடன சொன்னா நாங்கள் சொறி லங்கா இல்ல சுவிஸ் சிற்றிசன் என்று எனக்குதான் உடன் கோபம் வந்துடுமே அப்ப இங்கவா பிறந்தநீங்கள் என்று இல்லை வந்து எட்டு வரிடம் இவர் வந்து பதினாறு வரிடம் எல்லாரும் சிற்றிசன் எடுத்திட்டம் என்று சொன்னார் உங்களுக்கு விசா இருக்கா என்று கேட்டார் நான் சொன்னேன் எங்களுக்கு எப் விசா தான் இருக்கின்றது என்று அவா உடனே எப் விசா ஆட்களை திருப்பி அனுப்பபோறான்கள் என்றார் சுவிஸ்காரன் விசா தந்தாலும் இவாதர விடமாட்டா போல என்று நினைத்து கதைய வளர்க விரும்பாமல் நடக்கிறது நடக்கட்டும் அனுப்பினா போய் அம்மாவோட இருக்கின்றது தான் என்று சொல்லி கொண்டு இறங்கிற இடமும் வந்ததால இறங்கி கடைக்கு வந்து விட்டோம்

உண்மையில் ஒரு பிரமாண்டமான மலிவு விற்பனை தான் உடுப்பு நகை என தாராளமான தெரிவு இருந்தது எதைப்பார்த்தாலும் எடுக்க வேணும் போல் இருந்தது காசு அதிகம் இல்லாததால் கையும் கொஞ்சம் கடித்தது 3 சுடிதாரும் 2 சாரியும் எடுத்தேன் தோழியும் அவ்வாறே வேறும் சில சோடினை பொருள்களும் வாங்கினோம் சும்மா நகை பாப்போம் என்று பக்கத்தில் போனேன் ஒரு அக்கா தாலி கொடி வாங்க பார்த்துக்கொண்டு இருந்தா இதைவிட பெரிசா இல்லையா என்று கேட்டா கடைக்கார அக்கா கேட்டா யாருக்கு பார்கின்றீர்கள் என்று எனக்குதான் என்றா நான் கழுத்தை பார்த்தேன் ஒரு கொடி கழுத்தில கிடக்குது கடைக்கார அக்காவும் பார்த்தா வாங்க பார்த்த அக்கா சொன்னார் இது நூல் கொடி உள்ளுக்கு நூல் மேல தான் தங்கம் நான் இப்ப வைர கொடி தனித்தங்கத்தில பார்கின்றேன் என்றா இதில இப்ப புதிதாக ஒரு பக்கத்தில வாற கொடியோட கல்லுவைத்து செய்திருக்கின்ற பென்ரனும் இல்லை என்றார் அந்த அக்கா வேறு கொடி சில எடுத்து காட்டினா இவாட தொல்லை தாங்க முடியாமல் கூட வந்த புருஷன் மானத்த வாங்காம கெரியா எடு நான் வெளியில நிற்கின்றன் எல்லாம் எடுத்து முடிய கூப்பிடுவாறன் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்
அக்கா இன்னும் கொஞ்சம் பெரிதாக எடுங்க இவர்ற அக்காட கொடிய விட இது சின்னதாக இருக்கின்றது என்றார் ,,,மறுபடியும் தோழி நுள்ளி வா வாய் பார்க்காமல் நாங்கள் போய் மரக்கறி சாப்பாட்டு சாமான்கள் அடுத்த கடையில் வாங்கி கொண்டு போவம் என்றாள்

பலசரக்கு பொருள்கள் கடையில் சரியான சனம் நாங்கள் அந்த கடையில் பொருள்கள் மலிவு என்பதால் ஒரே வரும் வசதியும் இல்லாததால் பலவிதமான பொருள்கள் வாங்கினோம் வாங்கி காசு கொடுப்பதற்கு வரிசையில் நிற்கும் போது என்னுடன் படித்த நளாயினியை கண்டு விட்டேன் அவள் உறவுக்கார பெடியனை கலியாணம் செய்து போன மாதம் தான் சுவிஸ் வந்தவள் என்று அம்மா போனில சொன்னவா அவளோ வெண்டிகாயை கையில் வைத்து கொண்டு இதை இலங்கையில் நாங்கள் எப்பிடி அப்பா சொல்ற நாங்கள் என்று கேட்டால் எனக்கு எப்பிடி இருக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சிவமேனகை
 — 

Geen opmerkingen:

Een reactie posten