இந்தியா காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்ல.............
ராஜபக்ஷே 2008 வாக்கில் என்.டி.டி.வியில் ஒரு பேட்டியில் "பிரபகாரன் யார்?அவர் இலங்கைக் குடிமகன்"அவரை இலங்கை அரசுடன் பேசச் சொல்லுங்கள்" என்று சொன்னார்..அவர் பேசவில்லை.
எத்தனையோ முறை புலிகளே கூட போர் நிறுத்தம் அறிவித்தும் அதற்கு சிங்கள அரசும் ஒப்புக் கொண்டும்.அதன் இடைப்பட்ட காலத்தில் ஆயுதங்களை வாங்கிக் குவித்தனர், புலிகள்.போர் மீண்டும் தொடர்ந்தது..
யானையிறவு, முள்ளிவாய்க்கால் என ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து கொண்டிருக்கும் நேரம் என நினைக்கிறேன்..ராஜபக்ஷே "அப்போதைய முதல்வரான கருணாநிதியையும், எதிர்கட்சி தலைவரான ஜெ..வையும் இலங்கைக்கு வரவழைத்து "பிரபாகரனுக்கும், புலிகளுக்கும் நல்ல புத்தி சொல்லி போரிட வேண்டாம் என்று சொல்லுங்கள்;என்று அழைத்தும், போகவில்லை, நம்மவர்கள்..
ஜெ..ஒரு படி மேலே போய்,"புலிகளால் என் உயிருக்கே ஆபத்து இருக்கிறது;ஆகவே நான் சொல்லி அவர்கள் கேட்க மாட்டார்கள்" என்று ஒதுங்கியவர்...
டெல்லியோ, தன் ஒவ்வொரு அசைவையும் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு , நாராயணன், சிவசங்கர் மேனன் மூலம் சொல்லி, கருணாநிதி சம்மதம் பெற்றே மேலே தொடர்ந்து சென்றது..கருணாநிதி அப்பாவியாக இப்போது ஏதும் சொல்ல முடியாது..
இன்னும் சொல்லப் போனால், "மழை விட்டும் தூவானம் விடவில்லை "என்று மே 2009ல் சொன்ன மஹான்..
அவரின் உண்ணாவிரதம் பாசாங்குத்தனமானது என்று தயாநிதி மாறனே, அமெரிக்க தூதரிடம் சொன்னதாக விக்கிலீக் செய்தி வெளியிட்டது..
ஒரு வருடம் அல்ல, 30 வருடங்கள் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள். எல்லாம் தெரிந்த அவர்களுக்கு "அப்பாவிகள் அனாவசியமாக உயிரிழக்க நேரிடும் " என்றும் தெரிந்திருக்க வேண்டும்..
இப்போது, "காமன்வெல்த் மாநாட்டிற்குப் போகக் கூடாது" என்று தமிழகத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்..
தாமரையும், காங்கிரசும் கூட மண்டையை ஆட்டியிருக்கிறது; வேறு வழியில்லாமல்..
தி ஹிண்டுவிலும் இது சம்மந்தமாக ஒட்டியும் , வெட்டியும் எழுதியிருக்கிறார்கள் வாசகர்கள்..
என்னைப் பொறுத்தவரை இந்தியா அவசியம் கலந்து கொள்ள வேண்டும்..
தமிழர்களுக்கு சம உரிமை என்பதெல்லாம் எதிர்காலத்தில் கொஞ்சமாவது நடக்க, இந்தியா முதலில் சிங்களவனை மதிக்க வேண்டும்..காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்ல வேண்டும்..
தமிழக அரசின் தீர்மானத்தைக் குப்பையில் கடாசி விட்டு.
Geen opmerkingen:
Een reactie posten