தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 oktober 2013

"சோமாலியாவின் நம்பிக்கைப் போராளி"

இனத்தின் விடுதலையை மறுத்துப் பேசும் அனைவருக்கும் கன்னத்தில் ஒரு அடி..!
---------------------------------------------------------------------
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமர்ந்திருப்பது அந்த கிளையை நம்பி அல்ல அதன் சிறகை நம்பி,
அவ்வாறு நம்பிக்கை என்ற சிறகை நம்பி வென்றவர்தான் இவர்...


பசிகளின் தேசம் என்று அழைக்கப்படும் சோமாலியாவில் பிறந்து தன்னை உழைப்பு என்ற தங்கத்தால் உருக்கி நடந்து முடிந்த ஒலிம்பிக்கு போட்டியில் தொடர் ஓட்டங்களில் பிர்த்தானியாவிற்கு இரண்டு தங்கபதக்கத்தை பெற்று தந்த முஹமது பாராஹ்,

கடுமையான உழைப்பு யாரையும் கொல்லாது: என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி முஹம்மது பாராஹ்!

சோமாலியாவில் பிறந்தவர் தனது எட்டு வயது வரை தனது நாட்டில் இருந்தவர் பின்பு தந்தையைப் பார்க்க பிர்த்தானியவிற்கு இடம் பெயர்ந்தார் , கல்வி பயிலும் காலங்களில் ஆங்கிலத்தில் பேசமுடியாமல் பல ஏளனப் பேச்சுக்களுக்குள்ளாகி அவமானம் அடைந்துள்ளார், காலம் பதில் சொல்லும் என்பதை போல எந்தத் தேசத்தில் அவமானத்திற்கு உள்ளானரோ அந்தநாட்டின் செலவில் பயிற்சி மேற்கொண்டு
அந்த நாட்டிற்க்கு இரண்டு தங்க பதக்கங்களை பெற்றுத்தந்தார்.

வேறொரு தேசத்தில் இருந்தாலும் தான் பிறந்த மண்ணையும். தாய்நாட்டையும் மறக்காமல் சோமாலியாவில் தனது பெயரில் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து தன் தாய் நாட்டு மக்களுக்கு உதவி வருகிறார் பாராஹ் ,

வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது பிர்த்தானியவிற்கு!, உதவிகளை மேற்கொள்வது தனது தாய்நாட்டிற்கு! இதைவிட வேறென்ன வேண்டும் ,

தனது நாட்டில் இருந்து இனத்தின் விடுதலை எவ்வளவு முக்கியம் என்று தெரியாமல் படித்தும் வேக்கணம் பேசுபவர்களுக்கு நண்பர்களுக்கு பாராஹ் பற்றி இன்னொரு செய்தி குறிப்பிடவிரும்புகின்றேன்

என் நேரடி அனுபவம் இது 23 செப்டம்பர் 2013, அன்று சரியாக 14.44 மணிக்கு (2.44,மதியம்) நான் லண்டனில் வங்கிகணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்த ஒரு மின்னஞ்சல் (எனது மிக முக்கியமான மின்னஞ்சல் வரும் மின்னஞ்சல் முகவரி) எனக்கு வந்தது. அதில் "I NEED YOUR HELP" என்று இருந்தது கீழ மோ பாராஹ் (முஹம்மது பாராஹ் என்ற பெயரின் சுருக்கம் ) எனக்கு சிறிய சந்தேகத்துடன் இந்த பெயரை எங்கையோ கேள்விப்பட்ட
பெயராச்சே என்ற சிந்தனையில் மின்னஞ்சலை வாசிக்க ஆரம்பித்தேன், அந்த செய்தியை வாசித்து முடித்த பின்பு அதுவரை விளையாட்டு வீரானாக தெரிந்த பாராஹ், மின்னஞ்சலை வாசித்து முடித்த பின்பு சோமாலியாவின் மிகபெரிய நம்பிக்கை என்று புரிந்தது..!!

அந்த மின்னஞ்சல் செய்தியில் தனது தாய் நாட்டிற்க்கு (சோமாலியாவிற்கு) மிக பெரிய வங்கி , பணம்மாற்று சேவையை
(money transfer ) முறைமுழுவதும் நிறுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


இதனால் பிர்த்தானியவில் வாழும் சோமாலியா மக்கள் பெரிதும் பாதிக்கப்டுவார்கள் என்றும் எனது தாத்தா மற்றும் பாட்டி எனது குடுபதிதினர்கள் மற்றும் எனது தொண்டு நிறுவனம் பாதிக்கப்படும் என்பதால் இதில் ஒரு மனு ஒன்று இணைத்துள்ளேன் தாங்கள் மனுவைவில் கையைப்பம் இட்டு அனுப்புமாறு அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுருந்தார் நானும் அதை செய்தேன் ,

அவர் அந்த மனுவை அளித்தது பிரித்தானியாவின் மிகப்பெரிய வங்கிக்கு எதிராக.... அவருக்கு ஆயிரம் அச்சங்கள் இருந்திருக்கலாம், ஏனென்றால் பாராஹ் வசிப்பது பிரத்தானியா குடியுரிமையில் , அவர் தற்போதும் பிரத்தானியாவின் விளையாட்டு வீரார்தான் அவரின் அணைத்து வாழ்வாதாரம் பிரத்தானியாவில்தான் , அப்படி இருந்தும் தனது தாய்நாட்டுக்கு மக்களுக்கு பிரச்சனை என்றவுடன் தன்னை
மீறி செயல்ப்பட்ட முஹம்மது பாராஹ் , உண்மையில் ஒரு போராளிதான்!

எங்கிருந்தாலும் தனது தாய்நாட்டின் பிரச்சனை தனது பிரச்சனையாக எடுத்து செயல் பட்ட முஹம்மது பாராஹ் , தனது மொழி மறந்து , தனது இனத்தின் வரலாறு மறந்து , வாழ்ப்பவர்களுக்கு கன்னத்தில் ஒரு அடி அடித்தது போன்றுதான் ,

பணம் , பதவி , சுகங்கள் என்று அனைத்தும் கிடைத்தவுடன் தன்னிலை மறந்து ,
படித்தும் வெட்டியாக பேசும் உங்களுக்கு இதைவிட ஒரு உதராணம் தேவையில்லை என்றே நினைக்கிறேன் . ,,,

தன் இனத்தின் வரலாறு மறந்தவன் தன் வரலாறு மறந்தவன்!

தன் மொழியை மறந்தவன் தன்னை மறந்தவன்!

தன்னை மறந்து வாழ்பனுக்கு மருத்துவத்துறையில் வேறொருபெயர்,

இயற்கை கூட மறையும் காலத்தின் கட்டயாத்தால்,
ஒருபோதும் என் மொழியையும், என் இனத்தையும் ,
இயற்க்கை நினைத்தாலும் ஒன்று செய்யமுடியாது!

சிலம்பரசன் தமிழரசன்
7.10.2013

Geen opmerkingen:

Een reactie posten