தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 februari 2014

நீதிக்கான நடை பயணம் 7ம் நாள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் !

தமிழ் மக்களைக் கொன்றொழித்து அடிமை கொள்ளத் துடிக்கின்ற சிறிலங்காவின் சுதந்திர தினமான நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், ஜெனிவா நோக்கி நடை பயணம் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டவீரர்களும் அதில் கலந்துகொண்டனர்.
பெப்பரவரி 4ம் திகதி பிரித்தானியர்களின் ஆதிக்கத்திலிருந்து சிங்களவர்கள் விடுபட்டு ஆட்சியதிகாரத்தை கையேற்ற நாள். ஆனால் தமிழர்கள் தமது இறைமைய சிங்களவர்களிடம் இழந்தநாள்.
இந்நாள் தமிழர்களைப் பொறுத்தவரையில் சுதந்திரநாள் அல்ல இருண்டநாள், கரிநாள் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக பெல்ஜியம் வாழ் தமிழர்கள் உணர்வுடன் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்து நாம் என்னும் சுதந்திரம் அடையவில்லை எமது இறுதி தீர்வு தமிழீழம் தான் என்பதையும் சர்வதேசம் ஒரு சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
நீதிக்கான நடை பயணத்தை மேற்கொண்டு உள்ள எமது அறவழிப் போராட்டவீரர்களும் கலந்து கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து தமது உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தூதரங்களுடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பில் தமிழ் மக்களுக்கு நடைபெறும் இன அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையின் தேவை கருதி ஆழமான உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten