தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 februari 2014

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் இயக்கங்களை தடை செய்ய வேண்டும்: ஞானதேசிகன்!!


விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் இயக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அமைதிக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (27) செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், 4 பேருக்கு தண்டனை குறைப்பு எப்படி நியாயமாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை பொலிஸ், அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்திய ஞானதேசிகன், தாக்குதலில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்துவோம் என்றார்.

இந்த கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், மாற்றுக் கருத்துக்காரர்கள் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும், சமூக விரோத சக்திகளை அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் என்றும் ஞானதேசிகன் கூறினார்.
27 Feb 2014
http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1393503116&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten