தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்தால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தான் ஒதுங்குவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சவால் விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் நலனைக்கொண்டு செயற்படுவதில்லையென தெரிவித்த அவர்,தமது கதிரைகளை பாதுகாக்கும் நோக்கிலேயே அவர்கள் செயற்படுவதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு கிராம சேவையாளர் பிரிவுகளைக்கொண்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 45 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் இந்த ஆண்டுக்கான அபிவிருத்திக்கென 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தி பணிகள் பொதுமக்களின் ஆலோசனையுடன் நடைபெறவேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் இது தொடர்பில் விசேட கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நிதி மூலம் வறுமை ஒழிப்பு,கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்,ஆரம்ப கல்வி,பொது நோக்கு அபிவிருத்தி உட்ட பல திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகர், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட திணைக்கள தலைவர்கள்,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.அத்துனடன் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் பொதுமக்களின் கருத்துகளும் பெற்றுக்கொள்ளப்பட்டமை விசேட நடவடிக்கையாகும்.
http://news.lankasri.com/show-RUmsyCSbLUjqz.html
Geen opmerkingen:
Een reactie posten