தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 februari 2014

ஈழத்தை கனவாக்கிய ராக்கியின் முதலைக்கண்ணீர்!/2009 LTTEயை அழித்தது நாங்கள்: சித்தாத்தன்! பிரபாகரனை தம்பி என்பதன் அர்த்தம்??


எண்பத்து ஐந்துகளிலேயே(1985-1986) ஈழம் உருவாகும் சூழல் கனிந்து இருந்தது!இயக்கங்கள் கருத்தால் முரண் பட்டாலும் சேர்ந்து நின்று பொது எதிரியை முகாமில் முடக்கினர்!
eros,eprlf போன்றவை செல் அடித்து ராணுவத்தை கிலிக்குள் வைத்திருக்க PLOTஇனர் பாதுகாப்பு அரண்களும் கண்ணிவெடிகளும் கொண்டு காத்தனர்! தம்பா கோட்டையை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட TELO தாக்குதல்கள் செய்தனர்!புலிகள் பிஸ்ரலால் வானூர்தியை தாக்க முயற்சி செய்த காலமது!கிட்டு தலைமையில் இவர்களும் யாழ் போலீஸ் நிலையம் போன்றவற்றை தாக்கி ராணுவம் பலமடைய வழி செய்தனர்,போட்டிபோட்டு இயக்கத்தை வளர்த்தனர்!

பின்னர் முக்கூட்டு முன்னணி,நார்கூட்டு முன்னணி என்று புலிகள் மற்ற இயக்கங்களால் இணைக்கப்பட்டதன் விளைவாக இணைத்தவர்கள் துரோகியாக கள்ளர்கள் தியாகிகளாகி புலிகள் தமிழரின் ஏகப்பிரதிநிதிகளாகி இலங்கை ராணுவம் நெல்லியடிவரை முன்னேற்றம் கண்டது!

இதனால் இந்திய தமிழர்,ஈழத்தமிழர் அழுத்தத்தால் ஒப்பந்தம் ஏற்பட்டு இந்திய அமைதிப்படை இலங்கை வந்து புலிகளின் ஒத்துழையாமையால் போருண்டாகி தமிழர்கள் கொல்லப்பட்டு......இன்று ஈழம் கனவாகிப்போக காரணமானவர்கள் மற்றவரை குறை கூறுவது வேடிக்கை,தமிழன் உண்மையை உணராமை அறிவீனம்!

அதற்காக தியாகிகள் என்பதல்ல அர்த்தம்,இந்நிலைக்கு முழுக்காரணமும் தொலை நோக்கற்ற,உலக மாற்றங்களை புரியாத,தலைமை ஆசை மட்டுமே கொண்ட இவர்கள்தான் என்பதே!இவர்களின் அதிகார வெறியால் மற்றவர்கள் எதிரிகளுடன் இணைந்தார்கள்,போராட்ட்டத்தை துறந்து புலம் பெயர்ந்தார்கள்!

முழு துரோகத்தையும் தமிழருக்கு செய்தவர்கள் தமிழருக்காக போராடியோர் என்பது வேடிக்கை மட்டுமல்ல,வேதனையுமே!!

விடுதலைப் புலிகள் 2009இல் அழிக்கப்பட்டதாக வவுனியாவில் வைத்து மார்பு தட்டி புலிகளை அழித்ததில் இலங்கை அரசை விட எமக்கும் அதிக பங்கு உண்டு என வெளிநாட்டுச் செய்திச் சேவைக்கு கருத்துரைத்த PLOTE தலைவர் த.சித்தாத்தன் இன்று முதலைக் கண்ணிர் வடிப்பது எதற்காக? நடிப்பு என்பதற்கும் அப்பால் சுயநலம், காரணம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றி மகிந்தவின் அமைச்சரவையில் அமைச்சராவதை அடிப்படையாக வைத்தே இந்த நடிப்பு இன்றைய சூழ்நிலையை அறிந்து உயிர்வாழ்வதற்காக வெளிநாட்டு செய்திச் சேவையில் ஒப்பாரி.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த எத்தனை குடும்பத் தலைவர்கள் இன்றும் இல்லை, அதற்கும் அப்பால் இவர் தலைமையில் இருந்த PLOTE ஆல் சீரளிக்கப் பட்ட எத்தனை பெண்கள் இன்றும் இல்லை எத்தனை பெண்கள் மன நோயாளிகளாக இப்படிப் பட்டவர் புலிகளின் தலைவரை தம்பி என்பது உள்ளத்திலிருந்தா என்பது யாவருக்கும் புரியும்
“நான் இன்றல்ல என்றுமே கூறும் ஒரு விடயம் விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனிடம் மட்டுமே இருந்த தமிழ் ஈழத்திற்கான அர்ப்பணிப்பு எவராலும் கேள்விக்கு உட்படுத்தமுடியாத ஒன்று. அதனால்தான் அவர் மாகாண சபை முறையை நிராகரித்திருந்தார். குறிப்பாக அதனை ஏற்றிருந்தால் தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்டு விடும் என்பதுவே காரணம். தவிர மாகாண சபை முறைமையில் அதிகாரம் இல்லை என்பது அல்ல…”
விடுதலைப்புகளின் தலைவரால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து தமது வழமையான தமிழ் இன அழிப்பை விட முடியாதிருந்த சித்தாத்தன் புலிகளின் மௌனிப்பின் பின்னும் இணையாமல் நாளடைவில் கோத்தாபாயவின் ஆலோசனைப்படி கூட்டமைப்பினுள் உள் நுளைந்து உளவு பாற்பதுடன் இன்று தந்தை தர்மலிங்கத்தை விற்று அரசியல் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இவரை தமிழர்கள் அறிவார்களா அல்லது வரலாற்றுத் தவறை செய்வார்களா?
http://www.jvpnews.com/srilanka/59725.html

வடமாகாண சபையில் விபச்சாரி வீடாகி விட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு! மீளுமா????

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் பல கட்சிகள் ஒன்று சேர்ந்த தமிழர்களின் பலம் என்று வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி உச்சரிப்பதல்ல அதனை உருவாக்கிய நோக்கத்தை மக்களுக்காய் முன்னகர்த்துவது இதன் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகித்தவர்கட்கு அர்த்தமுள்ளதாய் அமைய வேண்டும் இதுவே ஜதார்த்த நிலமை.
இதை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கிய வேளை ஒன்றாய் இருந்தவர்கள் பின்னர் விலகியதும் இணையாமலே வீராப்புப் பேசியவர்களும் இன்று வருவது வியப்பாய் உள்ளதுடன் வேடிக்கையானது.
முதலில் தமிழர் விடுதலைக் கூட்டனியில் தன்னைத்தான் தலைவர் எனும் வீ.ஆனந்தசங்கரி இவர் யார் ஆசிரியத் துறையில் இருந்து அரசியலுக்குள் நுளைந்தவர் அது தவறல்ல தமிழனின் உரிமை.. உரிமை.. என கூறி தென்னிலங்கை அரசுகளிடம் ஆடிய ஆட்டம் என்ன, போட்ட கும்மாளம் தான் என்ன, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய காலப் பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. கால ஓட்டத்தில் சிங்களத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அடமானம் வைத்து பிழைப்பு நடாத்த, ஒரு சிலரால் காப்பாற்றப்பட்டது
அதன்பின்னர் இவர் PLOTE தலைவர் த.சித்தாத்தன EPRLF பத்மநாபா அணி இன்னும் பல தமிழ் விரோத சக்திகள் செய்தவைதான் என்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் புலி.. புலி வேறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேறல்ல என இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் செய்த சூறாவெளிப் பிரச்சாரம் தான் என்ன அதனால் தமிழ் மக்கள் கண்ட பின்னடைவுதான் எதனை.
இவர்கள் அன்று செய்த பிரச்சாரம் புலிகளுக்கு எதிரானது அல்ல முழுத் தமிழ் இனத்துக்குமே எதிரானது முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாறதுங்கவின் அரவனைப்பில் இருந்து கொண்டு முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமருடன் இணைந்து தமிழர்களை சர்வதேசத்திடம் இருந்து பிரிப்பதில் செய்த சூழ்ச்சிதான் முள்ளிவாய்க்காலும், முடம், கூன், குறுடு, எல்லாம் இன்று அவஸ்தைப்படக் காரணம்.
சித்தாத்தன் ஓரிரு வருடங்கலாய் தமிழ் தேசியம் பேசினாலும் இதற்கு எதிராய் செய்த அட்டூளியங்கள் தான் எத்தனை வவுனியாவில் வரி என அறவிட்டு வன்னியிலிருந்து வந்தால் PLOTE அலுவலகங்களில் வதைக்கப்பட்ட நிலைதான் எத்தனை இலங்கை இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து தமிழர்களை அழித்த நிலைதான் எத்தனை
EPRLF வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராயிருந்து இந்திய இராணுவ வெளியேற்றத்துடன் வெளியேறியவர் ஆனால் இந்திய அரசுகளுடன் இணைந்து தமிழர்களை அழிக்க திட்டம் தீட்ட தவறவில்லை பிறப்பில் தமிழனான அனைவரும் தமிழன் வாழ்வதை பற்றி சிந்தித்த நாளை விட அழிப்பதைப் பற்றி சிந்தித்த நாட்களே அதிகம் இந்திய அரசாங்கத்தை துண்டிவிட்டு கூத்துப்பாற்பதில் பிரதான பங்கு வகித்த இவர் அவருடன் இணைந்து இவரது கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதரன் (சுகு) இவர் இந்தியாவில் வீட்டில் இருந்த நாட்களை விட இந்திய புலனாய்வாளர்களின் அலுவலகங்களில் இருந்த நாட்களே அதிகம். இவ்வாறு தமிழர்களின் பலத்தை குறைக்க சிந்திக்காத நாளுமில்லை காங்கிரஸ் கட்சி நாச்சியப்பனுடன் இணைந்து தமிழர்களின் ஒற்றுமைக்கான ஒன்று கூடல் என கூறி நடிக்காத நாடகமும் இல்லை. இவருக்கு எல்லாம் இன்று யாழ் மாவட்டத்தில் போட்டியிட ஆனந்தசங்கரியின் கட்சியின் பிரதி நிதியாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது..
கூட்டமைப்பின் கொள்கை.. கொள்கை.. என்றவர்கள் சுகுவை இணைக்க முடியும் என்றால் தேசியம், இணைந்த தமிழர்களின் வட-கிழக்கு தாயகம் எல்லாம் எங்கே?? எல்லாம் விற்கப்பட்டு விட்டதா?? அப்படியானால் அன்று பிள்ளையான் இணைவதற்கு கேட்ட வேளை இணைத்திருந்தால் கிழக்கு மாகாணசபையை கைப்பற்றியிருக்கலாம! வடமாகாண சபையில் EPDP – டக்ளஸ் UPFA – அங்கஜனை இணைத்தால் எதிற்பின்றி வடமாகாண சபையைக் கைப்பற்ற மடியும். என்னதான் எதிர்காலம்? விபச்சார வீடாக மாற்றப்பட்டுள்ளதா கூட்டமைப்பு??  மக்கள்.. மக்கள்.. என முழங்கி எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியும்?? இன்று அரசு செய்யும் அட்டூளியங்களை விட கூட்டமைப்பு செய்யும் அனியாயம் எத்தனை?’ எத்தனை?? யாரிடம் செல்வேம்… யாரிடம்  சொல்வேம்…..
கொள்கை உடையவர்களை வைத்து விட்டு மற்றவர்களை விரட்டி விடுவதால் தமிழனுக்கு ஒரு பாதகமும் இடம் பெறாது. சங்கரி இருந்து என்ன சாதித்தார் அல்லது இனி என்னதான் சாதிக்கப் போகிறார் சித்தாத்தனும் அதே நிலைதான் இன்னும் ஏன் தயக்கம் முடிவு தாமதமானால் அழிவு நிச்சயம்.
2008010460711001_384945e
North_MPs_1
TULF-PLOTE-EPRLF.jpegvavuniya_anjali01அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் கொள்கையும் மௌனிக்கப்பட்டு விட்டதா? என்கிற அச்சம் நிலவியது அதுவும் நிஜமானது! தமிழர்களிகளின் போராட்டத்திற்கு பலமளித்ததில் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதான பங்கு, அதனது வெளிப்பாடுகளுக்கு கடந்த காலம் நற்சான்று.
அவைகளும் இன்று பயனற்றதாயிற்று, காரணம் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியிலிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் தர்சானந்த் மற்றும் கஜதீபன் PLOTE , TELO ஆகிய கட்சித் தலைமைகளின் காலில் விழுந்து வடமாகாண சபைத் தேர்தலுக்கு ஆசனம் கேட்டது கேட்பதற்கு அசிங்கமாய் உள்ளது. தமிழரசுக் கட்சியின் முடிவு தாமதமானதால் இவர்கள் அங்கு சென்று அசடு வடித்ததை எண்ணி தமிழ் இனம் வெட்கப்படுகிறது PLOTE  கஜதீபனுக்கு ஆசனம் வழங்கியதாகவும் தர்சானந்த் அலைந்து திரிவதாயும் தகவல்கள்.
ஒவ்வெரு வருடமும் தமிழ் தேசியம் கூறி யாழ் பல்கலைக்கழகத்தில் பல சிரமப்பட்டு இராணுவர் அடித்து, உதைத்து, சித்திர வதை செய்து சிறையில் அடைத்த வேளையில் எல்லாம் தமிழ் இனம் தர்சானந்தைப் பார்த்து உயர்வாய் நினைத்தது. எல்லாம் இந்த சுயநல அரசியல் ஆசனத்துக்காகவா?? எமது போராட்ட அடைவுமட்டம் உணர்வுகளை விற்று பிழைக்கும் இளைஞர்களும் உருவாகிவிட்டார்களா??? எனும் போது தமிழனின் அடுத்த கட்ட அரசியலானாலும் சரி ஆயுதம் தரித்த போராட்டம் ஆனாலும் சரி “மைனஸ்” என்பது மட்டும் உண்மை.
எது எவ்வாறாயினும் உறுதி மிக்க தலைமை என எதிரியும் இன்று வரை எண்ணி உயர்வடையும் புலிகளின் தலைமையின் கீழா இப்படிப்பட் தமிழ் இனத்தின் ஒருசில இளைஞர்களும் அரசியல் வாதிகளும் வாழ்ந்தார்கள்?? என்பது மனதிற்கு கசப்பாய் இருந்தாலும் புலிகளின் தலைமையை இலங்கை அரசு முடக்கிய தால்,  உளமாற மகிழ்வது இப்படிப்பட்ட பினாமிகள் என்பது மட்டும் புலப்படுகிறது. எது எவ்வாறாயினும் வடமாகாண சபையில் கள்ளன், காவாலி, காட்டிக் கொடுத்தவன், எல்லாம்  கூட்டமைப்பில் (TNA) நின்றாலும் விரட்டி விட்டு நல்லவனை இனங்காண்பது பிரதானமானதாகும்..jaffna_18512_2
ராக்கி
tharakki2@gmail.com

Geen opmerkingen:

Een reactie posten